
மதுரை: பிஜேபி அரசு ஓராண்டு சாதனை விழா கொடி ஏற்ற வந்த மாநில நிர்வாகி மாவட்டத் தலைவர் உள்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
மத்தியில் ஆளக்கூடிய பாரதிய ஜனதா கட்சியின் ஓராண்டு சாதனை விழா மதுரை சோழவந்தான் தொகுதியில் கொண்டாடப்பட்டது இவ்விழாவை முன்னிட்டு பிஜேபி மாவட்ட தலைவர் மகாசுசீந்திரம் தலைமையில் நடந்தது இதில் மாநில விவசாய அணி துணை தலைவர் மணி என்ற முத்தையா உட்பட பிஜேபி கட்சியினர் சோழவந்தான் பகுதியில் இனிப்புகள் வழங்கினார்

வாடிப்பட்டியில் கொடி ஏற்றுவதற்காக மாநில விவசாய அணி துணை தலைவர் மணி என்ற முத்தையா மாவட்ட தலைவர் மகா சுசீந்திரம் உள்பட ஐந்து பேர் இருந்தனர் அப்போது வாடிப்பட்டி போலீசார் கொடி ஏற்றக் கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு பட்டனர் இதில் பிஜேபியினர் கட்சிக் கொடியை ஏற்றிய தீர்வு என்று கூறியதால் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து வாடிப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்
அங்கே மேலதிகாரியின் அறிவுறுத்தல் பேரில் வழக்குப்பதிவு செய்து விடுதலை செய்தனர். இதன்பின் வாடிப்பட்டியில் பிஜேபி கொடியினை மாநில விவசாய அணி துணை தலைவர் மணி என்ற முத்தையா ஏற்றி வைத்த மாவட்ட தலைவர் மகா சுசீந்திரம் இனிப்புகள் வழங்கினார் நிர்வாகிகள் கோவிந்த மூர்த்தி முரளி ராமசாமி வாசுதேவன் உட்பட பிஜேபி கட்சியினர் கலந்து கொண்டனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை