
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பாஜக.,வின் முன்னாள் மாநிலத் தலைவருமான K.N. லட்சுமணன் இன்று அமரரானார்.
அவரது மறைவுக்கு பாஜக.,வினர், இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். அவரை பிரிந்து வாடும் உற்றார் உறவினர் கட்சிப் பிரமுகர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக, அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அமரர் திரு கே என் லட்சுமணன்
திரு.கே.என்.இலஷ்மணன் முன்னாள் மாநில தலைவர், முன்னாள் மயிலை சட்டமன்ற உறுப்பினர்.
அக்டோபர் 20,1930 பிறந்தவர்
படிப்பு: ஒன்றாம் வகுப்பிலிருந்து 11- வது (S.S.L.C) வரை ஸ்ரீ கோகுலநாத ஹிந்து மஹாஜன உயர்நிலை பள்ளியில் படித்தார். பிறகு சேலம் முனிசிபல் கல்லூரியில் பி.எ பட்டப் படிப்பு படித்தார்.
சொந்த வியாபாரத்தை தொடர்வதற்காக டாக்டர் படிப்பை விடுத்து வந்தவர். சிறந்த உடற்பயிற்சி வீரர், மல்யுத்த வீரர் என் பாராட்டப்பட்டவர். தனது மாணவ பருவத்தில் உடற்பயிற்சி யால் சாண்டோ என்ற செல்ல பெயரை பெற்றார்.
நா.பா.வாசுதேவன் ஜி மூலம் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தில் 1944 ல் தன்னை இணைத்துக் கொண்டு ஸ்ரீராம் ஜி டிடேல் கர் மாவட்ட பிரச்சாரக் வழிகாட்டுதலில் ஸ்வயம் சேவகர் ஆனார்.
1946 ல் பெல்காம் முதலாம் ஆண்டு முகாம் முடித்தார்.
1947 ல் சென்னையில் இரண்டாம் ஆண்டு முகாம் முடித்தார்.
1948 ல் ஆர்.எஸ்.எஸ் தடை ஆகையால் மூன்றாம் ஆண்டு நாக்பூர் போக முடியவில்லை.
1957 ல் ஷாக்கா விழா ஒன்று முடிந்து வாசவி மஹாலில் ஒரு சிறு கூட்டம் நடைபெற்றது அதில் ஸ்ரீ தந்தோபந்த தேங்கடி ஜி வந்து இருந்தார் அரசியலில் நாட்டம் உள்ளவர்கள் உங்களில் யாருக்கெல்லாம் ஆர்வம் உள்ளது என்று கேட்க நா.பா.வாசுதேவன், S.A.பழனிசாமி, P.கோவிந்தன், கிருஷ்ணன்,சு.வையாபுரி,K.M.ராமசந்திரன் R.V.ஆறுமுகம் என்று இவருடன் சேர்ந்து ஒன்பது பேர் உடனே தேங்கடிஜி தலைமையில் சேலத்தில் அப்போதே ஜனசங்கம் தொடங்கப் பட்டது.
மாவட்ட செயலர் பின்பு மாவட்ட பொதுச் செயலாளர், பின்பு மாவட்ட தலைவரானார். மாநிலத் தலைவர்களாக ஸ்ரீ. நா.பா.வாசுதேவன் ஜி, ஸ்ரீ.ஜனா கிருஷ்ணமூர்த்தி ஜி காலத்தில் மாநில பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
1980 ல் பாரதீய ஜனதா கட்சி துவங்பட்டபோது 1984 முதல் 1989 வரை மாநில தலைவராகவும், 1996 முதல் 2000 வரை மாநில தலைவராக இரண்டு முறை இருந்தார்.
2001 முதல் 2006 வரை மயிலாப்பூர் சட்டமன்றத் உறுப்பினராகவும் இருந்தார். 2006 முதல் இன்று வரை தேசியப் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.
நூற்றுக்கணக்கான போராட்டங்கள் சிறைவாசமாக மூன்று முதல் நான்கு ஆண்டுகள் அனுபவத்தார். 1970 முதல் 1974க்குள் நா.பா.வாசுதேவன் ஜியு ம் இவரும் சேர்ந்து ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியை துவக்கினார்கள். 1967 ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஹிந்தி தடைசெய்யப்பட்டது.
நமது குழந்தைகள் ஹிந்தி படிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்வயம்சேவகர்கள் அனைவரும் விருப்பம் தெரிவிக்க டில்லிக்கு சென்று C.B.S.E பாடத்திட்டத்தில் பள்ளியை துவங்கினார்கள்.
1969 ல் செவ்வாய்பேட்டை மாருதி அசோசியன் கட்டிடத்தில் சுமார் 35 குழந்தைகள் வைத்து துவங்கி முதல் தலைவராக ஸ்ரீ.செ.சொ.ராமராவ் ஜி இருந்தார்.
1970 to 1974 க்குள் 24 ஊர்களில் பள்ளிக்கூடம் அமைத்தார்கள். இரும்பாலையிலும் அமைத்து, பிறகு கல்லூரியும் அமைத்து இன்று வரை 10 ஆயரம் பேசும் தெய்ங்களுடன் ஸ்ரீ வித்யா மந்திர் எனப்படும் கோவிலிலே அதிக நேரத்தை கொடுத்து வருகிறார்.
தீனதயாள் ஜி,வாஜ்பாய் ஜி, அத்வானி ஜி போன்றோரில் இருந்து இன்று பாரத பிரதமர் நரேந்தி மோடி ஜி வரை அனைவரிடத்திலும் நெருக்கமானவர். சமீபத்தில் திரு.அப்துல் கலாம் ஐயாவின் நினைவு மண்டபம் திறப்பு விழாவிற்கு வந்த பாரத பிரதமர் அவர்களை வரவேற்றார். மோடி ஜி நமது இலஷ்மணன் ஜியிடம் நலம் விசாரித்து சௌராஷ்ட்ராவில் பேசினார் என்பதும் சிறப்பே.
நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலை கட்டுப் படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இச்சூழலில் ஒவ்வொரு மாநிலத்தின் நிலைமையையும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த எத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும், பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி தினமும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் தொலைபேசியில் பேசி நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார். இதன்படியே 21/4/2020 தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மாநில தலைவருமான சேலம் லட்சுமணன் ஜி அவர்களை மதியம் 2.30 மணிக்கு தொலைபேசியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, 90 வயதை எட்டிய லட்சுமணன்ஜியின் உடல்நலம் குறித்தும், அவரது குடும்பத்தாரின் உடல் நலம் குறித்து விசாரித்துக் கொண்டார். பிறகு, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எவ்வாறு இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
திரு.K.N.இலட்சுமணன் ஜி அவர்கள் ஜூன் 1 இரவு 09.05 மணியளவில் பாரத தாயின் திருவடியை அடைந்தார். அரசியல் ஆன்மீகம் கல்வி என எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்கிய அவரது மறைவு அவரது உறவினருக்கு மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சிக்கும் ஒரு மாபெரும் இழப்பு.
அன்னாரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன. அவர்தம் ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறோம்.
- நம்பி நாராயணன், (ஆசிரியர், ஒரே நாடு)