
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது! தமிழகத்தில் மேலும் 1,927பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியது!
தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 326 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 5 நாட்களில் மட்டும் 94 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் அரசு மருத்துவமனையில் 12 பேர், தனியார் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
செங்கல்பட்டில் இதுவரை இல்லாத அளவாக 182 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப் பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் 105 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 33 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 11ஆவது நாளாக ஒரே நாளில் பாதிப்பு 1,000ஐ தாண்டியது

தமிழகத்தில் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்துள்ள மாவட்டங்களாக…
- சென்னை – 25,937
- செங்கல்பட்டு – 2,328
- திருவள்ளூர் – 1,581
- காஞ்சிபுரம் – 600
- திருவண்ணாமலை – 548 ஆகியவை உள்ளன. குறிப்பாக வட மாவட்டங்களே அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன.
- தமிழகத்தில் மேலும் 1927 பேருக்கு கொரோனா
- தமிழ்நாட்டில் இன்று 1927 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
- தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1927 பேருக்கு தொற்று பாதிப்பு
- தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36,841ஆக உயர்வு
- சென்னையில் மட்டும் இன்று 1392 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
- இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 1392 பேருக்கு தொற்று உறுதி
- சென்னையில் இன்று 8ஆவது நாளாக கொரோனா பாதிப்பு 1,000ஐ தாண்டியது
- தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1,008 பேர் டிஸ்சார்ஜ்
- கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,333ஆக உயர்வு

- சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,937ஆக உயர்வு
- சவுதி, குவைத்திலிருந்து விமானத்தில் வந்த 3 பேருக்கு தொற்று உறுதி
- மாலத்தீவிலிருந்து கப்பல் மூலம் வந்த ஒருவருக்கு கொரோனா உறுதியானது
- வெளி நாடுகள், மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 30 பேருக்கு கொரோனா
- மகாராஷ்டிரத்தில் இருந்து தமிழகம் திரும்பிய 8 பேருக்கு இன்று கொரோனா உறுதி
- தில்லியிலிருந்து தமிழகம் திரும்பிய 4 பேருக்கு இன்று தொற்று உறுதி
- கர்நாடகா, கேரளாவிலிருந்து வந்த தலா 4 பேருக்கு இன்று தொற்று உறுதி