
கோயில்களை பக்தர்களின் வழிபாட்டுக்கு திறந்து விட வலியுறுத்தி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள கோயில்களி முன் ஒற்றைக்காலில் நின்று ஹிந்துமுன்னணியினர் புதன்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கோயில்களை வழிபாட்டுக்குத் திறந்து விடவேண்டும் என்று ஹிந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். ஊரடங்கு தளர்த்தப் பட்டு, பல்வேறு வணிகத் தலங்களும், டாஸ்மாக் கடைகளும் திறக்கப் பட்டு, மண்டல வாரியாகப் பிரிக்கப் பட்டு பொது போக்குவரத்தும் தொடங்கப் பட்டுள்ள நிலையில், தமிழக அரசு கோயில்களை மட்டும் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறந்துவிடாமல் உள்ளது.

எனவே கோயில்களை வழிபாட்டுக்கு திறந்துவிட வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறது இந்து முன்னணி. தமிழகம் முழுதும் நடைபெற்ற போராட்டங்களின் ஒரு பகுதியாக புதன்கிழமை மாலை 5 மணிக்கு கோயில் முன்பாக ஒற்றைக்காலில் நிற்கும் போராட்டத்தை நெல்லை, தென்காசி மாவட்ட இந்து முன்னணியினர் நடத்தினர்.

திருநெல்வேலி சாலைக்குமரன் சுவாமி கோயில் முன்பாக நடந்த போராட்டத்திற்கு மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தார். நெல்லையப்பர் கோயில், சந்திப்பிள்ளையார் கோயில், கோபாலசுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் போராட்டம் நடந்தது.

பக்தர்கள் தரிசனத்திற்கு ஆலயங்களை திறக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் ஜூன் 10 புதன்கிழமை மாலை 5 மணிக்கு ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை செய்யும் போராட்டத்தில்…
சாலை குமார சுவாமி கோவில் – குற்றாலநாதன் மாநில செயலாளர்
கைலாசநாதர் கோவில் – இசக்கிமுத்து
சொக்கநாதர் கோவில் – சங்கர்
வரதராஜ பெருமாள் கோவில் – விக்னேஷ்
பேராட்சி அம்மன் கோவில் – சிவா கொக்கிரகுளம்
ராஜகோபால சுவாமி கோவில் – பிரம்மநாயகம்
ராமர் கோவில் – செல்வராஜ்
பாளையங்கோட்டை சிவன் கோவில் – கைலாஷ்
குறிச்சி சொக்கநாதர் கோவில் – சங்கர் கருப்பந்துறை
தச்சை சந்தி மரியம்மன் கோவில் – துரைராஜ்
தச்சை சிவன் கோவில் – அருள்ராஜ்
உத்திஷ்ட கணபதி – கண்ணன்
பால்வண்ண நாதர் கோவில் – ராமச்சந்திரன்
திரிபுரசுந்தரி அம்மன் கோவில் – லட்சுமணன்
காமாட்சியம்மன் கோவில் – சிவா கோடீஸ்வர நகர்
சந்தி வினாயகர் கோவில் – அம்பலவாணன்
நெல்லையப்பர் சுவாமி கோவில் – சுடலை
காந்திமதி அம்பாள் சன்னதி – நமசிவாயம்
வாகையடி அம்மன் – ராஜசெல்வம்
தொண்டர் சன்னதி – முருகேசன்
திருவேங்கட நாதபுரம் – குமார்
சங்கானி சிவன் கோயில் – செந்தில் குமார்
அழியாபதீஸ்வரர் கோயில் – சுரேஷ் …. ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

தமிழக அரசே ! எல்லாமே திறந்தாச்சே
கோவிலையும் திறந்திடு
பக்தர்கள் தரிசனத்திற்கு ஆலயங்களை திறக்கக்கோரி தென்காசி நகர இந்து முன்னணி சார்பில் புதன் மாலை 5.30 அளவில் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு ஒற்றை கால் போரட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில்…
கடையநல்லூர் நகர் 5 இடங்களிலும்,
சங்கரன்கோவில் நகர்3
செங்கோட்டை நகர் 2
புளியங்குடி நகர் 3
தென்காசி நகர் 1
வாசு ஒன்றியம் 4
கடையநல்லூர் ஒன்றியம் 2
தென்காசி ஒன்றியம் 2
செங்கோட்டை ஒன்றியம் 2
கீழப்பாவூர் ஒன்றியம் 2
மேலநீலிதநல்லூர் ஒன்றியம் 1
சங்கரன்கோவில் ஒன்றியம் 1 என மொத்தம் 28 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்து முன்னணி நகர தலைவர் இசக்கி முத்து தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், நகர பொது செயலாளர் நாராயணன் மற்றும் 18வது வார்டு தலைவர் சிவமாரி 23,வது வார்டு தலைவர் சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை செய்தனர்.