International Yoga Day 2017 PM Narendra Modi Yogi - 2026

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு முதன் முறையாக பதவியேற்ற போது உலகம் முழுவதும் ஐ.நா.,சபையினால் உலக யோகாதினம் கொண்டாடப்பட்டது.

இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ம்தேதி உலக யோகாதினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தாண்டிற்கான உலக யோகாதினம் கொண்டாடுவதற்காக டில்லி, சிம்லா, மைசூரு, அகமதாபாத், மற்றும் ராஞ்சி ஆகிய 5 நகரங்கள் தயாராகி வருகின்றன.

இது குறித்து ஆயுஷ் அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், யோகாதினம் கொண்டாடுவதற்கு மேற்கண்ட நகரங்கள் தயார்நிலையில் உள்ளன.

நகரங்கள் தேர்வு செய்ய பிரதமர் அலுவலகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு நகரம் தேர்வு செய்யப்படும். பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் கலந்து கொள்ளும் முதலாவது பொது நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும்.

மேலும் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி முதன் முறையாக உலக யோகா தினம் தலைநகரில் டில்லியில் கொண்டாடப்பட்டது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

உலக தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். தற்போது மீண்டும் டில்லி நகரம் தேர்வு செய்யப் பட்டால் 2-வதாக தேர்வு செய்யப்பட்ட பெருமை டில்லிக்கு சேரும்.

2016 -ல் சண்டிகர் நகரிலும், 2017 -ல் உ.பி., தலைநகர் லக்னோவிலும் , 2018-ல் டேராடூன் வன ஆராய்ச்சி மையத்திலும் உலக யோகாதின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. குறிப்பிட தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending