
புதுக்கோட்டையில் விமான விபத்து நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் காலையில் தகவல்கள் பரவலான நிலையில் புதுக்கோட்டையில் விபத்து ஏதும் நடைபெறவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இதுகுறித்து கருத்து தெரிவித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி புதுக்கோட்டையில் விமான விபத்து ஏதும் நடைபெறவில்லை: என்று விளக்கம் அளித்தார் மேலும் விமான விபத்தில் நடைபெற்றதாக சொன்ன இடத்தில் அதற்கான எந்தவித சிறு தடயங்களும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார் .
முன்னதாக புதுக்கோட்டையில் சிறிய ரக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது என்று படத்துடன் தகவல் வைரலானது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே செங்காளம் வைந்தலூர் வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியது என்றும், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 6 பேர் பயணித்ததாக தகவல் என்றும் சமூக தளங்களில் வைரலானது.
மேலும் அந்த விமானத்தில் பயணித்தவர்களின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை என்றும் விபத்து நடந்த இடத்தில் உள்ளூர்வாசிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டதாகவும் சமூகத்தளங்களில் பகிரப்பட்டது இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் இவ்வாறு ஒரு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவே இல்லை என்று தெரிவித்துள்ளார்