
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் கே.பழனி கொரோனா நோய்த்தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் (மியாட்) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக., எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா உறுதியானது அதிமுக.,வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக., எம்.எல்.ஏ., பழனி.க்கு நடந்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதை அடுத்து சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். பழனி நலமுடன் உள்ளதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
பல்வேறு உடல் நலப் பிரச்னைகளுடன் ஜூன்.2ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, கொரோனா தொற்று உறுதியான நிலையில் சில நாட்களுக்கு முன்னர், திமுக., எம்எல்ஏ., ஜெ. அன்பழகன் உயிரிழந்தார். இது தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது