பைனான்ஸ் அதிரடி வசூல்: வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

Published:

madurai finance problem women group protest tahsildar
madurai finance problem women group protest tahsildar

மதுரை: அரசு ஆணையை பின்பற்றாத மகளிர் சுயஉதவி பைனான்ஸ் குழுவினரின் அடாவடி வசூல் வேட்டையை முறைப்படுத்த கோஸரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பெண்கள்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி அளிக்கும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கடனை திருப்பிக் கேட்டு அடாவடி வசூல் செய்வதாக மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையீடு செய்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவால் பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதனால் அரசே வீட்டு வாடகை முதல் கடன்தொகை வரை வசூல் கட்டாயப்படுத்தி செய்யக்கூடாது என அறிவித்தது.

கடந்த ஒரு வார காலமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் சூழலில் தடாலடியாக கடன் கொடுத்த நிறுவனங்கள் மற்றும் கந்துவட்டிக்காரர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வசூலுக்கு வந்து கடனைக் கட்டச் சொல்லி மிரட்டுவதாக பொதுமக்கள் முறையிடுகின்றனர்.

சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் L&T ,மகா சேமம் ,
,கிராமவிடியல் ,ஈஷாப்,ஆசீர்வாதம், வையாலோ, கிராமின் கூட்டம், பெல் , ஸ்டார், வரம், துவாரா உள்ளிட்ட பலவகையான
மைக்ரோபைனான்ஸ் நிறுவனங்கள் மகளிருக்கு கடனுதவி வழங்கியுள்ளன

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!
madurai finance problem women group protest tahsildar
madurai finance problem women group protest tahsildar

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல இடங்களில் சரிவர வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும் கடன்காரர்கள் மற்றும் கந்துவட்டிக்காரர்களும் கடன்களை கட்டச் சொல்லி மிரட்டுவதாகவும் பெண்கள் முறையிடுகின்றனர்.

தாங்கள் வேலைக்கு சென்று சாப்பிடுவதற்கே கஷ்டப்படும் சூழ்நிலையில் கடனை கட்ட இயலவில்லை என்றும், இன்னும் சிறிது கால அவகாசம் கேட்டால் தரக்குறைவாக பேசுவதாகவும் முறையிடுகின்றனர்.

இதற்கு மாபட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து தங்கள் கோரிக்கைகளை மனுவாக சாத்தூர் வட்டாட்சியர் ராமசுப்பிரமணியத்திடம் வழங்கினர்.

வட்டாட்சியர் அனைத்து நிதி நிறுவனங்களையும் அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பெண்கள் திரும்பிச் சென்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img