மதுரை நகரின் புதிய காவல் ஆணையர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மதுரை நகர காவல் ஆணையாளராக பிரேம் ஆனந்த் சின்கா ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். இங்கு காவல் ஆணையாளராக பதவி வகித்த டேவிட்சன் ஆசீர்வாதம் கூடுதல் டிஜிபியாக சென்னைக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே, சாத்தான்குளம் வணிகர் இறப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸார் மதுரை சிறைக்கு மாற்றப் பட்டனர். சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள் மதுரை நகரில் எதிர்காலத்தில் நிகழாதவாறு தடுக்க சிஸ்டம் கொண்டு வரப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்
முன்னதாக, சாத்தன்குளம் வணிகர்கள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் இறந்த வழக்கில் காவல் அய்வாளர், உதவி ஆய்வாளர்கள் இருவர் போலீஸார் ஆகியோர் மீது, நீதி மன்ற உத்தரவுப்படி கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த நான்கு பேரை சிபிசிஜடி போலீஸார் கைது செய்து அங்குள்ள கிளைச் சிறையில் அடைத்தனர்.
இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் அனைவரும் சனிக்கிழமை மதுரையில் உள்ள மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை