சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருடன் தொடர்பில்லை : கடம்பூர் ராஜூ

Published:

kadambur raju
kadambur raju

சாத்­தான்குளம் சம்­பவத்தில் கைதான இன்ஸ்பெக்­டர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அத்­த­கைய குற்­றச்­சாட்டு முற்­றிலும் தவ­றானது என்று தெரிவித்துள்ளார் செய்தித்துறை அமைச்­சர் கடம்பூர் ராஜு

தூத்துக்குடி மாவட்­டம் செக்­கா­ரக்குடியில் கழிவு நீர்த் தொட்டியை சுத்­தம் செய்த திரு­நெல்­வேலி மாவட்­டத்தைச் சேர்ந்த நான்கு பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்­த­னர்.

திரு­நெல்­வேலி மாவட்ட ஆட்சியர் அலுவ­ல­கத்தில் நேற்று, நான்கு பேரின் குடும்­பத்துக்கும், தலா 10 லட்­சம் ரூபாய் நிதியு தவியை அமைச்­சர்­கள் ராஜு, ராஜ­லட்சுமி, ஆட்சியர்கள் ஷில்பா பிரபாகர் சதீஷ், சந்­தீப் ­நந்தூரி ஆகியோர் வழங்கினர். 

இதன் பின்னர் செய்தித் துறை அமைச்­சர் கடம்பூர் ராஜூ  கூறியபோது….

செக்­கா­ரக்குடி­யில் நான்கு ­பேர் உயிரிழப்புக்குக்  காரணமான வீட்­டின் உரி­மையாளர் சோமசுந்­த­ரம் மீது வழக்குப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ளது. 

சாத்­தான்குளத்தில் எஸ்.ஐ., ரகுகணே­ஷால் தாக்கப்­பட்டு உயிரிழந்த­தாகக் கூறப்படும் மகேந்­திரன் சம்­ப­வம் விசாரணை­யில் உள்­ளது. 

தென்­காசி மாவட்­டம், வீர­கே­ரளம்புதுாரில் போலீ­சார் தாக்குதலில் இறந்த, ஆட்டோ டிரைவர் கும­ரே­சன் இறப்பு குறித்தும் விசாரணை நடக்­கிறது. சம்­பந்தப்­பட்­ட­வர்­கள் மீது நட­வடிக்கை எடுக்­கப்­படும்.

vkpudur auto driver
vkpudur auto driver குமரேசன்

சாத்­தான்குளம் தந்தை, மகன் இறப்பு விசார­ணை­யில் அரசியல் தலையீடு இல்லை என சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி., சங்­கர் தெரிவித்துள்­ளார். 

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

இந்த வழக்கில் கைதான இன்ஸ்­பெக்­டர் ஸ்ரீதரு­டன், என்னை தொடர்­பு ­ப­டுத்தி வெளியாகும் தக­வல்­களில் உண்மை இல்லை. அது தவ­றானது என்றார் கடம்பூர் ராஜூ.

Related articles

Recent articles

spot_img