தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:
- தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,22,350ஆக உயர்வு.
- சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,261 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 72,500 அதிகரிப்பு.
- தமிழகத்தில் மேலும் 64 பேர் உயிரிழப்பு – பலியானோர் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு.
- தமிழகத்தில் ஒரே நாளில் 3,051 பேர் டிஸ்சார்ஜ் – இதுவரை 74,167 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று 3756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1261 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது எனினும் சென்னையில் தொடர்ந்து 7ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ஆனால் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று ஒரே நாளில் 26 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 1,700ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,051 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் இதையடுத்து தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 74,167ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய பாதிப்புடன் சேர்ந்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,22,350ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 72,500ஆக உயர்ந்துள்ளது.
சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் தெரியவந்துள்ளது. சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 2495 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மதுரையில் இதுவரை இல்லாத வகையில் 379 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது
மாவட்ட வாரியாக கொரோனா தொற்று விவரம்