அப்சரா ராணி வழியாக ஒடிசாவை தெரிந்து கொண்டுள்ள ராம்கோபால் வர்மா!
கொரானோ ஊரடங்கு என்று நாடே வீட்டில் முடங்கிக் கிடந்தாலும் கிளுகிளுப்பு இயக்குனர் ராம்கோபால் வர்மா மட்டும் சும்மா இருக்கவே இல்லை என்பது அவரது அண்மைக் கால இணையதள வெளியீட்டுப் படங்களின் மூலம் நன்றாகத் தெரிந்தது. இப்போதும் அவர் இணையதளம் வழியே படத்தை மட்டும் வெளியிட்ட வில்லை… சமூகத் தளங்களின் வழியே சில பிட்டுப் பட போஸ்டர் ரேஞ்சுக்கு கிளுகிளு புகைப்படங்களையும் வெளியிட்டு, நம்மூரு பாரதிராஜா ரேஞ்சுக்கு “இது என் இனிய கிராமத்துக் கண்டுபிடிப்பு” என்று டயலாக்கும் விட்டு வருகிறார்.
பாரதிராஜா தான் கண்டுபிடித்த நடிகையின் கன்னத்தில் ஓர் அறை விட்டு, அதை சினிமா நிருபர்கள் வழியே பிரபலப் படுத்தி வந்தார் என்றால், ராம்கோபால் வர்மாவோ, தான் கண்டறிந்த நடிகை என்று கன்னத்தில் ஒரு ‘பச்சக்’ முத்தமிட்டு தனது சமூகத் தளங்களிலும் வெளியிட்டு, நடிகைக்கு வித்தியாச விளம்பரம் தேடித் தருகிறார்.
ஒரு இயக்குனர், தயாரிப்பாளர் நினைத்தால் இப்படியும் கூட பணம் பார்க்க முடியும் என ‘கிளைமாக்ஸ், நேக்டு நங்கா நக்னம்’ என இரண்டு படங்களை வெளியிட்டார். அடுத்து ‘த்ரில்லர்’ என்ற ‘கலர்ஃபுல்’ கலக்கல் கலர் படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார்.
த்ரில்லர் படத்தில் ஒடியா பெண் அழகு அப்சரா ராணி என்பவரை அறிமுகம் செய்கிறார். இதை அடுத்து, அப்சரா ராணியின் அழகுத் தோற்றத்தை விதவிதமாக கட்டம் கட்டி பளிச்செனக் காட்டும் வேலையில் இறங்கிவிட்டார் ஆர்ஜிவி.
இப்போது அப்சரா ராணிதான் சமூகத் தளங்களிலும் இணையதளங்களிலும் ஹாட் குயின். அவரது அழகுப் பிரதேசங்கள் எல்லாம் இப்போது இந்தியப் பிரதேசத்தின் இணையதளங்களில் வண்ண ஓவியங்களாக மின்னிக் கொண்டிருக்கின்றன.
அப்சராவின் புகைப்படங்கள் பலவற்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பும் கிளுகிளுப்பும் காட்ட ஆரம்பித்துவிட்டார் ஆர்ஜி வர்மா.
ராம் கோபால் வர்மாவின் அழகான அறிமுகத்தை அடுத்து, நேற்று மாலைதான் அப்சரா ராணி டுவிட்டர் கணக்கை ஆரம்பித்தார். 7 மணி நேரத்தில் 10ஆயிரம் பேர் ஃபாலோ செய்கிறார்கள் என்று ஓர் ஆச்சரியக்குறியுடன் ஒரு பதிவு போட்டார். அடுத்து, ஒரு நாளைக்குள் அப்சரா ராணியை 20 ஆயிரம் பேர் ஃபாலோ செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
நான் அப்சராவை சந்திப்பதற்கு முன்னர் ஒடிசாவைப் பற்றி கேள்விப்பட்டது, 1999ம் வருட புயலைத்தான். ஆனால் அவரை சந்தித்த பின்னர், இப்போது உணர்கிறேன்… ஒடிஸா அனைத்து வித புயல்களையும் உருவாக்கும்… ஒடிஸா இது போன்ற அழகுப் புயல்களையும் உருவாக்கும் என்று ஒரு ட்வீட் போட்டார்.
அப்சரா ராணி ஒடிஸாவில் இருந்து வந்தவர். மலைப் பிரதேசமான டேஹ்ராடூனில் பிறந்து வளர்ந்தவர். தற்போது ஹைதராபாத்தில் வசிக்கிறார். அவர் சிறந்த டான்ஸர் அதைவிட மிகச்சிறந்த நடிகை… என்று ஒரு டிவீட் போட்டார்.
இதனிடையே அப்சரா ராணி, தன் டுவிட்டர் பதிவில் ஆபாச கோணத்தில் எடுத்த ஒரு புகைப்படத்தை நள்ளிரவில் வெளியிட்டார். அதைப் பார்த்த வர்மா இந்த நேரத்தில் இந்தப் புகைப்படத்தை எடுத்தது யார் எனக் கேட்க, அவர் ‘எனது அம்மாதான், அவர் ஒரு சிறந்த போட்டோகிராபர்’ என பதிலளித்தார்.
அப்சரா ராணி ஒரு மாடலாக இருந்து நடிகையாக மாறியுள்ளார். அவரது இயற்பெயர் அன்கேதா மகாராணா என்பதே.