மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு இரு தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அவரை சந்தித்துப் பேசியிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது என்று, தகவல் வெளியாகி உள்ளது.
தலைமைச் செயலகத்தில் இரு தினங்களுக்கு முன் ஜூலை 7ஆம் தேதி, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் இணையதள தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வருடன் மின்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.
தொடர்ந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 5 கோடிக்கான காசோலையை, மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்ட நிகழ்வில், தங்கமணி கலந்துகொண்டு காசோலையை முதலமைச்சரிடம் நேரடியாக வழங்கினார்
இந்நிலையில் மத்திய அமைச்சர் கலந்து கொள்ளும் மின் துறை தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு அனைவருக்கும் குர்ஆனோ பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது அந்த பரிசோதனையின்போது மின்துறை அமைச்சர் அமைச்சர் தங்கமணிக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இந்த பரிசோதனையின் போது, அவரது மகன், கார் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களுக்கும், கொரோனா தொற்று பாதித்துள்ளது கண்டறியப் பட்டது. அதைத் தொடர்ந்து, முதல்வருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக, தகவல் வெளியானது.
இதுகுறித்து முதல்வர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ‘முதல்வருக்கு அவ்வப்போது கொரோனா குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முதல்வர் அலுவலக ஊழியர்களுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை நடத்தப்படுகிறது’ என்று தெரிவித்தனர்.