கான்பூரில் போலீசாரை சுட்டுக் கொன்று பிடிபட்ட விகாஸ் துபே உள்ளிட்ட குண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்ற உ.பி. எஸ்.டி.எஃப் கார் கவிழ்ந்த நிலையில், அதிலிருந்த விகாஸ் துபே என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.
கான்பூரில் காவலர்கள் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குண்டர்கள் மற்றும் முக்கியக் குற்றவாளியான விகாஸ் துபே, மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனிலிருந்து கான்பூருக்கு கொண்டு சென்று கொண்டிருந்தபோது, உ.பி. எஸ்.டி.எஃப் கார் கவிழ்ந்ததில் ஏற்பட்ட மோதலில் விகாஸ் துபே கொல்லப்பட்டார்.
விகாஸ் துபே உள்ளிட்ட குண்டர்களுடன் உத்தர பிரதேச போலீசார் தங்கள் மாநில எல்லைக்குள் நுழைந்த பின்னர் வெகு எச்சரிக்கையாக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. போலீஸாரின் துப்பாக்கி சூட்டில், விகாஸ் துபே படுகாயம் அடைந்துள்ளார். இதை அடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே மருத்துவர்கள் விகாஸ் துபே உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில், காயமடைந்த போலிஸார் மற்றும் பிற விவரங்கள் குறித்த தகவல்கள் இனி வெளியாகும் என்று தெரிகிறது.
8 போலீஸ்காரர்களைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட விகாஸ் துபே இன்று காலை நிகழ்ந்த என்கவுண்டரில் உயிரிழந்துவிட்டார்…
‘கான்பூர் குண்டர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்’ என்று செய்தியாளர்களிடம் பேசிய உத்தரபிரதேச காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
துப்பாக்கி குண்டு காயங்களுடன் கான்பூரின் ஹாலட் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட விகாஸ் துபே, இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
விகாஸ் துபே அவரை ஏற்றிச் சென்ற யுபி எஸ்.டி.எஃப் கார் கவிழ்ந்த பின்னர் தப்பிக்க முயன்றதாக போலீசார் கூறுகின்றனர்.
விகாஸ் துபே கார் கவிழ்ந்த பின்னர் காயமடைந்த போலீஸ்காரர்களின் கைத்துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸார் கூறுகின்றனர்.
அவரை சரணடையச் செய்ய போலீசார் முயன்றனர், அப்போது அவர் போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், போலிஸார் பதிலுக்கு சுட்டதில் அவர் காயமடைந்ததாகவும் போலீஸார் கூறுகின்றன.
இதன் பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், என்று எஸ்.பி. கான்பூர் வெஸ்ட் கூறினார்.
விகாஸ் துபேவை ஏற்றிச் சென்ற உ.பி. எஸ்.டி.எஃப் கார் கவிழ்ந்த பின்னர், விகாஸ் துபே காவல்துறையினரிடமிருந்து ஆயுதங்களை பறிக்க முயன்றதாகவும், அவர் என்கவுண்டரில் கொல்லப்படுவதற்காக முயற்சி மேற்கொண்ட போது, போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்றதாகவும், அப்போது குண்டு பாய்ந்து காயம் அடைந்த நிலையில் துபே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகின.
துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகளும் கூறியுள்ளனர்.
விகாஸ் துபே மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள மகாகல் கோயிலில் இருந்து வியாழக்கிழமை (நேற்று) கைது செய்யப்பட்டார், இன்று காலை முன்பு எப்போதும் இல்லாத வகையிலான பாதுகாப்புக்கு மத்தியில் கான்பூருக்கு கொண்டு வரப்பட்டார்.
முன்னதாக கான்பூர் துப்பாக்கிச் சூடு வழக்கில் இந்த குண்டர்கள் முக்கியக் குற்றவாளிகளாக இருந்துள்ளனர்.
ஜூலை 3 நள்ளிரவு காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்ய சென்றபோது விகாஸ் துபே மற்றும் கும்பல் பதுங்கியிருந்து போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதில், போலீசார் 8 பேர் கொல்லப்பட்டனர்.
கான்பூர் என்கவுன்டர் வழக்கிற்குப் பிறகு விகாஸ் துபே மிகவும் தேடப்பட்ட குற்றவாளிகளில் ஒருவராக இருந்தார். கடந்த வாரம் முதல், உபி., காவல்துறையினர் குண்டர்களின் பல நெருங்கிய சகாக்களை கைது செய்தனர். அமர் துபே உள்ளிட்ட சிலர் கொல்லப்பட்டனர்.