விருந்தாவனத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் புல்லாங்குழலில் இருந்து வெளிப்பட்ட அந்த தெய்வீக இனிய வேணுநாதம் தென்றல் காற்றில் கலந்து கோபியர்களை சென்றடைந்தது.
அதனைக் கேட்டு மெய்மறந்த அவர்கள் உள்ளங்களில் கிருஷ்ணபக்தி பெருவெள்ளமாக பெருக்கெடுத்து அன்பின் மிகுதியால் அவர்கள் தங்களுக்குள் கிருஷ்ணலீலை பேசி கழித்தார்கள் கிருஷ்ணரே கணவராக அடைய வேண்டும் என்று தோன்றிவிட்டது அவர்களுக்கு.
அதன்பொருட்டு சிவபெருமானின் துணைவி கௌரியை பூஜித்து அவள் அருளைப் பெற எண்ணினார்கள். அவர்கள் மார்கழி மாத பனியில் தினமும் அதிகாலையில் எழுந்து யமுனை நதியில் நீராடி பிறகு நதிக்கரையில் இருந்த மணலை அள்ளி எடுத்து அம்பிகையின் திருவுருத்தை வடித்து பூஜைகள் செய்து அதில் வாசனை திரவியங்களை பூசி தீபச்சுடர் காட்டி தாங்கள் செய்த தின்பண்டங்களை படைத்து வழிபட்டார்கள் ஒவ்வொருவரும் அம்பிகையிடம் எனது வந்தனங்கள் உனக்கு சமர்ப்பிக்கிறேன் நந்தனின் புதல்வனை நான் கணவராக அடைவதற்கு அருள் புரிவாயாக என்று உள்ளம் உருகி மீண்டும் மீண்டும் வேண்டிக்கொண்டார்கள்.
யாகங்களில் தேவர்களுக்கு படைத்த உணவின் எச்சத்தை உண்டு அவர்கள் உயிர் வாழ்ந்து வந்தார்கள் இப்படியே ஒரு மாத காலம் சென்றது அவர்களின் உற்சாகம் குறையவே இல்லை அவர்களுக்கு அருள் புரிய அதுவே தகுந்த சமயம் என்று கிருஷ்ணர் நினைத்தார்
கோபியர்கள் நதியில் ஆடையின்றி நீராடியது சாஸ்திர விதிகளுக்கு புறம்பானது மட்டுமின்றி அது தேவர்களை அவமதித்தது போல் ஆகும் சிறுவன் பருவத்தை அடைந்த பாலகிருஷ்ணன் அவர்கள் குளிக்கும் இடத்திற்கு தனது நண்பர்களையும் அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தார் கிருஷ்ணர் நதிக்கரையில் இருந்த அவர்களுடைய ஆடைகளை எடுத்து ஒளித்து வைத்துவிட்டார்.
இதனால் கோபியர்கள் தங்கள் தவறை உணர்ந்து திருந்தும் படி செய்தார் கிருஷ்ணர். கிருஷ்ணர் அவர்களை பார்த்து என்னை மணப்பதற்காக நீங்கள் உங்கள் மனதில் உறுதியுடன் இருப்பதை நானறிவேன் நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன் உங்கள் எண்ணம் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டியது
அவர்கள் தங்கள் உள்ளங்களை எனக்கு அர்ப்பணித்து விட்டார்கள் என்னை அடைவதற்காக காத்து கொண்டு இருக்கிறார்களே அவர்களுடைய இயக்கமானது இந்தரிய சுகத்திற்காக அல்ல வறுக்கப்பட்ட அல்லது வேக வைத்த தானியங்களிலிருந்து மீண்டும் மூளை வளருமா? அவரவர் பிரதேசத்துக்கு எல்லோரும் திரும்பிச் செல்லுங்கள் வெற்றி உங்களுக்கே தேவியை எந்த நோக்கத்திற்காக நீங்கள் விரதமிருந்து பூஜித்து அந்த எண்ணம் ஈடேறும் நாள் வந்துவிட்டது.
வரப்போகும் இரவுகளில் நீங்கள் என்னுடன் சேர்ந்து கழிக்க போகிறீர்கள் என்று கூறியருளினார் மகாபாரதப்போர் முடிந்து பல ஆண்டுகள் கழித்து போக வேண்டிய காலம் நெருங்கியது அப்போது பகவான் கிருஷ்ணர் உத்தவருக்கு மிக விரிவாக உபதேசங்களை அருளியதை பாகவத புராணம் நமக்கு எடுத்துரைக்கிறது.
உபதேசங்களை உத்தவரிடம் கூறும்போது கிருஷ்ணர் கோபியர்கள் புத்திக்கூர்மை பெற்றிருக்கவில்லை வேதங்களையும் அவர்கள் அறியாதவர்கள் உயர்ந்த மகான்களும் இல்லை மகான்களுக்கு சேவை செய்ததில்லை தவம் புரிந்தது இல்லை அப்படி இருந்தும் தங்கள் களங்கமற்ற அன்பினால் அவர்கள் என்னை அடைந்தார்கள் என்னுடைய உண்மையான சொரூபத்தை அவர்கள் அறிந்து கொள்ளாமல் தங்கள் இதயம் கவர்ந்த ஒரு இனிய காதலனாகவே என்னை கருதினார்கள். அப்படி இருந்தும் என்னுடைய சம்பத் அவர்கள் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் பரம்பொருளான பிரம்மத்தை, என்னை வந்தடைந்தார்கள் என்று கூறினார்.
விண்ணில் தோன்றிய ஒரு அசரீரி வாக்கு தேவகி வயிற்றில் பிறக்கும் குழந்தைதான் உன்னைக் கொல்லப் போகிறது என்று கூறி அவனை எச்சரித்தது இதைக் கேட்டுக் கலங்கினான் தேவகிக்கு பிறந்த குழந்தைகள் பிறந்தவுடனே ஒவ்வொன்றாக கொன்றான்.
எட்டாவது குழந்தையாக கிருஷ்ணனும் பிறந்தார். பிறந்தவுடன் தந்தை வசுதேவரைப் பார்த்து கிருஷ்ணர் என்னைக் கொண்டு சென்று கோகுலத்தில் உள்ள நந்தகோபர் இடத்தில் வைத்து விட்டு அவளுக்கு பிறக்கும் பெண் குழந்தை இங்கு கொண்டு வா என்று கூறி அருளினார்.
வசுதேவரும் அங்ஙனமே செய்து முடித்தார் வழக்கம்போல் கம்சன் தேவகிக்கு பிறந்த எட்டாவது குழந்தையை கொல்ல வந்தான் பெண் குழந்தை யோகமாயா அவன் கைகளில் இருந்து நழுவி வானில் பறந்து சென்று 8 கைகளுடைய அம்மனாக மாறி உன்னை கொல்லப் போகும் குழந்தை ஏற்கனவே பிறந்து வேறு இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று கூறி மறைந்தாள்
கம்சன் கிருஷ்ணரைக் கொல்ல பலமுறை முயற்சித்தும் ஒவ்வொரு முறையும் தோல்வியை சந்தித்தான்
கிருஷ்ணர் இருந்த பயம் நாளுக்கு நாள் அவனுக்கு அதிகமாகியது அல்லும் பகலும் கிருஷ்ணரே எண்ணி பயந்தான் சாப்பிடும்போதும் குடிக்கும் பொழுதும் பேசும்பொழுதும் நடக்கும் போதும் என் கனவில் கூட கிருஷ்ணன் நினைவாகவே இருந்தான் கடைசியில் கிருஷ்ணர் கம்சனைக் கொன்றுதும் அவன் பகவானுடன் இரண்டறக் கலந்தார்.
கோபியர்கள் தங்கள் பிரேமையால் இறைவனை அடைந்தார் கம்சனும் பயத்தினால் சாதித்தான்
சிசுபாலன் ருக்மணியை மணக்க விரும்பினான் ஆனால் ருக்மணி கிருஷ்ணரைத் என் கணவராக அடைய விருப்பம் கொண்டாள் புரிந்துகொண்ட கிருஷ்ணரும் அவளை காந்தர்வ விவாகம் செய்து கொண்டார் கோபமடைந்த சிசுபாலன் தன் படைகளோடு கிருஷ்ணரோட போர் புரிந்தான் போரில் சிசுபாலன் பயங்கர தோல்வியை எதிர்கொண்டான் கிருஷ்ணனுக்கு வெறுப்பு உண்டாயிற்று
அதன் காரணமாக கிருஷ்ணரை எப்போதும் அவன் மனதில் நினைத்துக் கொண்டே இருந்தான் கடைசியில் கிருஷ்ணர் அவனை வதம் செய்தார் பிறகு அவன் இறைவனோடு ஐக்கியமானான்
இறைவனை நிந்தித்தே சிசுபாலன் முக்தியடைந்தார் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் என்றால் மிக நெருங்கிய நண்பன் கிருஷ்ணரும் அவனது நலத்தில் எப்பொழுதும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் பாரதப்போரில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்தான் அப்போது கிருஷ்ணர் விஸ்வரூப தரிசனத்தை அவனுக்கு காண்பித்தான் அண்ட சராசரங்கள் யாவும் கிருஷ்ணரிடத்தில் ஒடுங்கியிருப்பது அவன் பார்த்தான்
அப்பொழுது அவன் கிருஷ்ணரை கைகூப்பி வணங்கி உங்களுடைய மகிமை இதுநாள்வரை உணராமல் ஒரு நண்பன் என்றே தங்களை நினைத்துக் கொண்டிருந்தேன் தங்கள் மேல் உள்ள அன்பினால் சில சமயம் தான் தங்களையே கிருஷ்ணா ஹே நண்பா என்றெல்லாம் அழைத்திருக்கிறேன் எங்கும் நிறைந்த பரம்பொருளே விளையாட்டாக நான் தங்களை தனிமையிலும் எல்லோர் முன்னிலையிலும் சாப்பிடும் பொழுதும் ஓய்வு கொள்ளும் போதும் நடக்கும் போதும் அமர்ந்து இருக்கையிலும் கேலியாகப் பேசி இருக்கிறேன்.
அவற்றையெல்லாம் நீங்கள் மன்னிக்க வேண்டுகிறேன் என்று பிரார்த்தித்தான் அர்ஜுனனும் மற்றவர்களும் இவ்வாறே நட்பினால் பகவான் கிருஷ்ணரை அடைந்தார்கள் இனத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணரை தங்களுக்குள் ஒருவராகவே பாவித்தார்கள் கிருஷ்ணரும் அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து அவர்களுக்கு பாதுகாப்பும் அளித்து அருளினார் யோகிகளை எடுத்துக்கொண்டால் அவர்கள் தூய அன்பினாலே இறைவனோடு ஒன்று சேர்ந்தார்கள்.
பகவானை கோபியர்கள் காதலாலும் கம்சன் சிசுபாலன் வெறுப்பாலும் பாண்டவர்கள் நட்பாலும் இனத்தவர்கள் தங்கள் இன பற்றினாலும் மற்றும் யோகிகள் தூய பக்தியினாலும் அடைந்தார்கள் என்று வெவ்வேறு தன்மை என இறைவனை அடைந்த விதத்தை நமக்கு ஒரு ஸ்லோகம் எடுத்துக் கூறுகிறது ஸ்லோகத்தில் கூறப்படும் கருத்து ஒருவன் தன்மனதில் இறைவன் அதில் எந்தக் கோணத்தில் செலுத்தி இருந்தாலும் அவரின் அருளுக்குப் பாத்திரமாகி விடுகிறான் என்பதை காட்டுகிறது
கம்சன் சிசுபாலன் பகவானிடம் எப்படி வெறுக்கத் தக்கவாறு நடந்து கொண்டார்களோ அப்படி நாம் எப்போதும் இருக்கக்கூடாது அதற்கு பதில் அன்பினால் இறைவனை அணுக வேண்டும்
கோபியர்களுடன் அவர்களுடைய செயல்களாலும் ஈர்க்கப்பட்ட கிருஷ்ணர் அவர்களோடு ராச கிரீடை செய்தார் சிறிது நேரத்தில் அவர்களுக்கு அகங்காரம் தலைதூக்க ஆரம்பித்தது.
மற்ற பெண்களைக் காட்டிலும் தாங்கள் அழகாலும் குணத்தாலும் உயர்ந்திருப்பதாக அவர்கள் நினைக்கத் தொடங்கினார்கள் கிருஷ்ணர் அவர்களிடம் இருந்து மறைந்தார்
கர்வத்திற்கு இடம் தராத ஒரே ஒரு கோபிகை மட்டும் கிருஷ்ணர் தம்முடன் அழைத்துச் சென்றிருந்தார் தனிமையில் கிருஷ்ணர் அவரிடம் சிறிது நேரம் தங்கியிருந்தது அவளுக்கு தான் மற்றவர்களைக் காட்டிலும் விசேஷமானவள் என்று எண்ணம் தோன்றியது அக்கணமே கிருஷ்ணர் அவளையும் பிரிந்தார் கோபியர்கள் தங்கள் தவறை உணர்ந்து மீண்டும் கிருஷ்ணனை அடைய ஏங்கினார்கள் அதன் பிறகுதான் கிருஷ்ணர் மறுபடியும் அவர்களுக்கு காட்சியளித்தார் எனவே அதற்கு இடம் கொடுக்காமல் தன்னை முழுமையாக அர்ப்பணித்து எப்பொழுதும் அவரை பற்றி கொண்டிருப்பதே ஒருவனுக்கு நன்மை தரக்கூடிய மிகச்சிறந்த வழியாகும்.