1001763494 - 2026

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

மதுரை சற்றுமுன் புகார் பெட்டி
1001763494 - 2026

சோழவந்தான் அருகே, ராயபுரத்தில் குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம்
ஏக்கருக்கு 30,000 முதல் 40,000 வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு கூறினர் .

மதுரை மாவட்டத்தின், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்களை பல இடங்களில் உள்ள அரசின் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைத்துள்ளனர்.


சில இடங்களில் மூடைகளாக பிடித்து கட்டி வைத்து தார்ப்பாய் போட்டு மூடி வைத்தும்
உள்ளனர் ஒரு சில பகுதிகளில் நெல்லை கொள்முதல் செய்யாமலும் சில பகுதிகளில் மூடைகளாக கட்டி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை குடோன்களுக்கு அதிகாரிகள் கொண்டு செல்லாமல் இருப்பதால்,
மூடைகள் தேங்கியும் நெல் மணிகள் மலை போல் குவிந்தும் இருப்பதால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.


குறிப்பாக, சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் ராயபுரம் ,ரிஷபம், திருமால் நத்தம், திருவாலவாயநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடை செய்த நெல் மணிகள் ராயபுரம் தேவாலயம் முன்பு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் , குடோன்களுக்கு கொண்டு செல்வதற்காக சுமார் 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கட்டி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால் குடோன்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்படுவதால் தற்போது விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து வருகின்றனர்.


குடோன்களுக்கு, கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக,
ராயபுரம் கிராமத்தின் மந்தை பகுதி சர்ச் பகுதி தெருக்களில் நெல்கள் குவித்து வைக்கப்பட்டும் நெல் மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டும் இருப்பது விவசாயிகளை கடும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது .


இது குறித்து, விவசாயிகள் தரப்பில் கூறுகையில், வரிசைப்படி தான் வாகனங்களை அனுப்ப முடியும் என அதிகாரிகள் கூறுவதால் பல நாட்களாக நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.


இதனால், திடீர் மழை பெய்யும் பட்சத்தில் நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதம் அடையும் நிலைக்கு தள்ளப்படும் இதன் காரணமாக ஏக்கருக்கு 30,000 முதல் 40 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்

விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென,
இந்த பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதேபோன்று, சோழவந்தான்
அருகே முள்ளி பள்ளம், இரும்பாடி ,கருப்பட்டி, நாச்சிகுளம், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் நெல் மூட்டைகள் குவியல்களாகவும் நெல் மூட்டைகளாகவும் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர் .


தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − eight =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.