spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்5 ஆயிரம் கடந்து உச்சம் தொட்ட கொரோனா தொற்று!

5 ஆயிரம் கடந்து உச்சம் தொட்ட கொரோனா தொற்று!

- Advertisement -
corona-virus-4
corona virus 4

இன்று தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது இதுவரை 4,900 என்ற அளவில் இருந்த நோய்தொற்று எண்ணிக்கை இன்று ஆயிரத்தை கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் – 5849 என்ற அளவில்லும், சென்னையில் 1171 என்ற அளவிலும் உள்ளது. இன்று கொரோனா நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உள்ளது 

தென் இந்தியா முழுவதும் இன்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினசரி புதிய உச்சம் தொட்டு வருகிறது கொரானா வைரஸ் தொற்று பாதிப்பு. 

தமிழகத்தில், இன்று ஒரே நாளில் 5849 என்ற அளவிலும் ஆந்திர மாநிலத்தில் 6045 என்ற அளவிலும் கேரளத்தில் 1048 இன்று எண்ணிக்கையிலும் இன்று கொரோனா பாதிப்பு பதிவானது 

இருப்பினும் இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கு தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60112 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. என்று சுகாதாரத் துறை  கூறி உள்ளது 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4910 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் . தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,86,492ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,31,583ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3,000ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3144ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1171 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 89,561ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது. இதுவரை தமிழகத்தில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 20,15,147. இன்று ஒரே நாளில் 60,112 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது

மார்ச் 1ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரையில் விடுப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் .

இன்றைய கொரோனா குறித்த அறிவிப்பு செய்தியில் விடுபட்ட 444 மரணங்களும் சேர்க்கப்படும் என்றார், ராதாகிருஷ்ணன்!

தென் மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பது போல் தமிழகத்திலும் தென்மாவட்டங்களில் நோய் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது

மதுரை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக கடும் நடவடிக்கைகளை போலீஸார் எடுத்து வருகின்றனர். கொரோனா தொற்று எதிரொலியாக, நெல்லை புதிய பேருந்து நிலைய காய்கறிகள் சந்தை அடுத்த 10 தினங்களுக்கு மூடப் படுகிறது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

district-wise-corona-case-july-22
district wise corona case july 22

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe