ஏப்ரல் 21, 2021, 7:11 மணி புதன்கிழமை
More

  ஆதரவற்ற, மனநோயாளிகள் இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டை மாறும்!

  ஆதரவற்றோர், மனநோயாளிகள் இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தை திகழச் செய்ய நடவடிக்கை எடுக்கப் படுவதாக

  pudukkottai-district-collector
  pudukkottai-district-collector

  ஆதரவற்றோர், மனநோயாளிகள் இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தை திகழச் செய்ய நடவடிக்கை எடுக்கப் படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.

  ஆதரவற்ற மனநோயாளிகள் இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தை திகழ செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது.

  புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடற்ற, ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு உணவு
  உறைவிடம் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்குவதுடன், கூடுதலாக அத்தகையோரின் குடும்பத்தை கண்டறிந்து சேர்த்து வைப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மக்கள் நல்வாழ்வுத் துறையால் எடுக்கப்பட்டு வருகிறது.

  இதற்கென, மாவட்ட மனநல திட்டத்தின் ஒரு பகுதியாக ‘மனநோய் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம்” தொடங்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் உத்தரவிடப்பட்டு அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மரு.முத்துலெட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் 50 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு ஏற்படுத்தப் பட்டுள்ளது.

  இவ்வகையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆதரவற்ற மனநோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான பரிசோதனைகள பரிசோதனைகள் செய்யப்படுகிறது. சாலைகளில் மனம் நலம் குன்றி சுற்றித் திரிவோரை பற்றி, மாவட்ட மனநல காப்பகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர்.

  • செய்தி: தனபால், புதுக்கோட்டை

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »