20/09/2020 1:49 PM

ரூ.2000 நோட் கேட்டு வங்கிக்கு சில்லறை மாற்ற வந்த பெண்! அபேஸ் செய்து சிட்டாய் பறந்த சம்பவம்!

சற்றுமுன்...

திருப்பதி பிரம்மோத்ஸவ கொடியேற்றம்; வழக்கமான கொண்டாட்டங்கள் இன்றி திருவிழா!

இரவு மணி 8.30 முதல் 9.30 வரை ஏழுமலையானின் பெரிய சேஷ வாகன சேவை கோவிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.

மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து!

எம்ஜிஆர் நிலையம் அருகே வாகனங்கள் செல்ல முடியாமல் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

வைகை ஆற்றில் தடுப்பணை; காணொளி மூலம் முதல்வர் தொடங்கி வைப்பு!

வாய்க்கால் சீரமைக்கும் பணியால் 1302.97 ஏக்கர் விளை நிலம் பயன் பெறவுள்ளது

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் தாயார் காலமானார்!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் வீட்டில் சோகம். அவருடைய தாய் சுலோச்சனா சுப்ரமணியம் காலமானார்.
money

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கேட்டு வங்கிக்கு வந்த பெண், வங்கி கேஷியரை ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்துவிட்டு பைக்கில் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காங்கயம் சாலையில் வீரக்குமார சுவாமி கோயில் இருக்கிறது. இந்த கோயில் பின்புறம் இந்தியன் வங்கி கிளை நீண்ட நாட்களாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், வங்கியில் நுழைந்த பெண் ஒருவர், நேராக கேஷியரிடம் சென்று 12, 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து தனக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, அந்த கேஷியர், அந்த பெண்ணிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார்.

பின்னர் திடீரென்று இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தனக்கு வேண்டாம் என்று கூறியதோடு, ரூபாய் நோட்டுகளை மடித்து கொடுத்துள்ளார்.

இதையடுத்து, தான் கொடுத்த 12,500 ரூபாய் பணத்தை 500 ரூபாய் நோட்டுகளாக வாங்கிக் கொண்டு அவசரமாக வெளியேறிவிட்டார்.

இதன் பின்னர் அந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கேஷியர் எண்ணியுள்ளார். அப்போது, மூன்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வங்கியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, பணத்தை கொள்ளையடித்து சென்ற பெண், இரண்டு பேருடன் பைக்கில் ஏறி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வங்கியில் புகுந்த கேஷியரை ஏமாற்றி பெண் ஒருவர் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

அடிமை வரலாறுகள் திருத்தப் பட்டாக வேண்டும்!

நாடு முழுவதும் வேத ஆராய்ச்சி மையங்கள், பல்கலைக் கழகங்கள் துவக்கப்படுவதும் மிக அவசியமே. அதனைச் செய்வதற்கு

சமையல் புதிது.. :

ஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்!

வெங்காய பீர்க்கங்காய் மசியல் தேவையான பொருட்கள் வெங்காயம். 200 கிராம்பீர்க்கங்காய். 200 கிராம்காய்ந்த மிளகாய்-6புளி....

சினிமா...

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா. 

Source: Vellithirai News

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!

சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்!  Source: Vellithirai News

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

செய்திகள்... மேலும் ...

Translate »