ஏப்ரல் 21, 2021, 4:06 மணி புதன்கிழமை
More

  மாணவரின் மகத்தான கண்டுபிடிப்பு! ப்ளே ஸ்டோரில் சேர்க்கப்பட்ட ஆப்!

  app

  வடமதுரை அருகே பள்ளி மாணவர் உருவாக்கிய செயலிக்கு ‘கூகுள்’ நிறுவனம் அங்கீகாரம் வழங்கி ‘பிளே ஸ்டோரில்’ சேர்த்துள்ளது.

  திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி நாகலட்சுமி. வடமதுரை மம்மானியூர் அரசு பள்ளி ஆசிரியர். இவர்களின் மகன் எம்.என்.பிரனேஷ் 13. திண்டுக்கல் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார்.

  ஐந்தாம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் கல்வியையும் கற்று வரும் இவர் ‘ஜெட் லைவ் சாட்’ (jet live chat) என்ற செயலியை உருவாக்கி கூகுளில் சேர்க்க விண்ணப்பித்தார்.

  pranesh

  செயலியை பரிசீலித்த கூகுள் பல கட்ட ஆய்விற்கு பின் அங்கீகரித்து பிளே ஸ்டோரில் சேர்த்துள்ளது. 28 ஆண்டுகள் ஒப்பந்தமும் செய்துள்ளது.

  தற்போது எரியோட்டில் வசிக்கும் மாணவர் கூறியதாவது: இரு வார முயற்சியில் இந்த செயலியை உருவாக்கினேன்

  இந்த செயலியின் சிறப்பு அம்சமாக ஆடியோ, வீடியோ போன் அழைப்புகளை மேற்கொள்ளலாம். அதிகளவு எம்.பி., கொண்ட பைல்களையும் அனுப்பலாம்.

  உதாரணமாக ஒரு முழு திரைப்படத்தையே அனுப்ப முடியும். முகநுாலில் ‘லைக்’ பதிவிடுவது போல இந்த செயலியில் அனுப்பப்படும் தகவல்களின் மீது 1000க்கும் மேற்பட்ட குறியீடுகளை கொண்டு கருத்து பதிவிடும் வாய்ப்பும் உள்ளது.

  எனது செயலிக்கு 2048 ஆண்டு வரை கூகுள் ஒப்பந்தம் செய்து தந்துள்ளது. 2018-ம் ஆண்டு பிந்தைய மாடல் வெர்ஷன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். அதற்கு முந்தைய மாடல் போன்களில் ‘அப்டேட்’ செய்து கொள்ள வேண்டும் ‘என்றார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »