21/09/2020 2:43 PM

கொள்ளையர்களால் தாக்கப்பட்டு பிரபல கிரிக்கெட் வீரரின் மாமா மரணம்!

சற்றுமுன்...

மணப்பாறை டூ கைலாசா! வழி வையம்பட்டி! கைலாசா ரசிகர்கள் பெருகிட்டாய்ங்க!

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இரண்டு திருமண நிகழ்ச்சிக்கு...

விவசாய மசோதாக்கள் நிறைவேற்றம்: மோடி பெருமிதம்! ‘குட்டு’ பட்ட ‘எட்டு’ எம்பி.,க்கள்!

மசோதா தாள்களை கிழித்து சபையில் அநாகரிகமாக நடந்து கொண்ட எட்டு எம்பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.

FCRA திருத்த மசோதா மூலம் மதமாற்று நிறுவனங்களுக்கு மோடி அரசு வைக்கும் ‘செக்’!

குறிப்பிட்ட NGO தாங்கள் தவறு செய்யவில்லை என்று நிரூபிக்கும் வரை, அவர்கள் அதுவரை வெளிநாட்டிலிருந்து நன்கொடை

பாரதி யுவகேந்த்ரா சார்பில் விருதுகளை வழங்கிய வையாபுரி!

மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் பத்திரிகையாளர் காளமேகத்துக்கு இவ்விழாவின் சிறந்த சேவைக்கான விருது

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.
suresh raina

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின், மாமாவை கொள்ளையடிக்க வந்த கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

அவருடைய அத்தை கவலைக்கிடமாக இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா. இவருடைய மாமா அசோக் குமார். பஞ்சாப் மாநிலம், பதன்கோட் மாவட்டத்தில் உள்ள தரியால் கிராமத்தில் வசித்து வந்தார்.

அரசுப் பணி ஒப்பந்ததாரர். கடந்த 19ம் தேதி இரவு அசோக் குமாரின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த கொள்ளை கும்பல், வீட்டில் இருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்தது.

அதை தடுக்க வந்த அசோக் குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது கொள்ளையர்கள் கடுமையாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றனர்.

இதில் பலத்த காயமடைந்த அசோக் குமார், அன்றிரவே உயிரிழந்தார். அவரது 80 வயதான தாய், மனைவி ஆஷாதேவி மற்றும் மகன்கள் அபின், கவுசல் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

ashok kumar

இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆஷாதேவி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொள்ளையர்களால் அசோக் குமார் கொல்லப்பட்ட தகவல், ஒரு வாரத்துக்குப் பிறகு இப்போதுதான் தெரிய வருகிறது. இதற்கான காரணம் கூறப்படவில்லை. இந்த கொலை, கொள்ளை சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

துபாயில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதற்காக சுரேஷ் ரெய்னா சென்றிருந்தார். சமீபத்தில்தான், சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான அறிவிப்பை டோனி அறிவித்த அன்றே வெளியிட்டார்.

இந்நிலையில், நேற்று காலை துபாயில் இருந்து சொந்த காரணங்களுக்காக நாடு திரும்புவதாக அறிவித்த ரெய்னா. உடனடியாக இந்தியா புறப்பட்டார்.

தனது மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காகதான் அவர் அவசரமாக திரும்பியதாக கருதப்படுகிறது. கிரிக்கெட் வீரரின் உறவினர் கொல்லப்பட்டதை தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

விளம்பரம்… வளரும் குழந்தைகளிடம் மூட நம்பிக்கையை வளர்க்கலாமா?

வளரும் பிள்ளைகளிடம் மூடநம்பிக்கையை வளர்க்கலாமா விளம்பரம்?

சமையல் புதிது.. :

சினிமா...

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.

Source: Vellithirai News

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!

சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்!  Source: Vellithirai News

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

செய்திகள்... மேலும் ...

Translate »