பிப்ரவரி 24, 2021, 11:51 மணி புதன்கிழமை
More

  யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை? ராதாகிருஷ்ணன் அறிக்கை!

  Home சற்றுமுன் யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை? ராதாகிருஷ்ணன் அறிக்கை!

  யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை? ராதாகிருஷ்ணன் அறிக்கை!

  radhakrishnan

  கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும்’ என புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

  இதுகுறித்து ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

  கொரோனா பரிசோதனை முடிவுகள் இல்லாமல் தமிழகம் வரும் அனைத்து வெளிநாட்டு பயணியருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறி இருந்தால் சோதனை செய்யலாம்.

  அறிகுறி உள்ள முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் சோதனை கட்டாயம். அதி தீவிர அறிகுறி உள்ளவர்கள், அதிக பாதிப்பு உள்ளவர்கள், கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் அறிகுறி உள்ளவர்கள், மருத்துவமனையில் அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோருக்கு பரிசோதனை கட்டாயம் செய்யப்படும்.

  வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

  இவர்களில் அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

  தொற்றுதொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். தொற்று இல்லாதவர்கள் வீட்டு தனிமையில் வைக்க வேண்டும்.

  வியாபார ரீதியாக வந்து 72 மணி நேரத்தில் திரும்புவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

  வெளிநாடுகளில் இருந்து வருவோர் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவதுடன் தொற்று இல்லை என்றாலும் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர்.

  ஒரு தெருவில் மூன்று குடும்பங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அதைக் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்க வேண்டும்.

  கிராமங்களில் தொற்று கண்டறியப்பட்டால் கிராமம் முழுதும் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்க வேண்டும்.

  கட்டுப்பாடு பகுதியில் தினசரி கிருமி நாசினி தெளிப்பதுடன் பொது மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்.

  தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறி மிதமாக அறிகுறி இணை நோய் அதிதீவிர அறிகுறி என பிரித்து சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.