பிப்ரவரி 24, 2021, 10:53 மணி புதன்கிழமை
More

  அந்தியூரில் மனைவிக்கு வந்த அந்தி நேரம்! கணவன் முன்னே நேர்ந்த சோகம்!

  Home சற்றுமுன் அந்தியூரில் மனைவிக்கு வந்த அந்தி நேரம்! கணவன் முன்னே நேர்ந்த சோகம்!

  அந்தியூரில் மனைவிக்கு வந்த அந்தி நேரம்! கணவன் முன்னே நேர்ந்த சோகம்!

  accident

  அந்தியூர் அருகே பைக்கில் சென்றப்போது ஏற்பட்ட விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள குருவரெட்டியூர் அஞ்சலக வீதியில் சதாசிவம் (56) – ஆதிலட்சுமி (52) தம்பதி வசித்து வருகின்றனர். இருவரும் ஜாதகம் பார்ப்பதற்காக பைக்கில் பட்லூர் – பவானி சாலையில் ஒலகடம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.

  bike-accedent

  அப்போது குட்டைமேடு என்ற இடத்தின் அருகே சென்றபோது, அதிவேகமாக பின்னால் வந்த மற்றொரு பைக் இவர்கள் மீது வேகமாக மோதியது. இதில் சதாசிவம் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

  அந்தரத்தில் பறந்துசில அடி தூரம் சென்று விழுந்ததில் பலத்த காயமடைந்த ஆதிலட்சுமி, கணவன் கண்முன்னே உயிரிழந்தார்.

  எனினும் சதாசிவத்திற்கு லேசான காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

  இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் விபத்து குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.