பிப்ரவரி 25, 2021, 2:09 மணி வியாழக்கிழமை
More

  பிறந்தநாளுக்கு ஆசையாய் கேக் வெட்டி சாப்பிட சிறுவன்! கேக்கில் நெளிந்த புழுவால் அதிர்ச்சி!

  Home சற்றுமுன் பிறந்தநாளுக்கு ஆசையாய் கேக் வெட்டி சாப்பிட சிறுவன்! கேக்கில் நெளிந்த புழுவால் அதிர்ச்சி!

  பிறந்தநாளுக்கு ஆசையாய் கேக் வெட்டி சாப்பிட சிறுவன்! கேக்கில் நெளிந்த புழுவால் அதிர்ச்சி!

  cake-1
  cake-1

  பிறந்தநாளுக்கு வாங்கிய கேக்கில் புழுக்கள் நெளிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  காரைக்குடி சத்யா நகரைச் சேர்ந்தவர் சோலையம்மாள். இவர் தனது 7 ஆம் வகுப்பு படித்துவரும் மகனின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் காரைக்குடி அம்மன் சன்னதி மணிக்கூண்டு அருகில் உள்ள ஒரு பேக்கரி ஒன்றில் பிறந்தநாள் கேக் ஒன்றை வாங்கியுள்ளார்.

  இதனை அடுத்து பிறந்தநாள் அன்று மாலை, தனது உறவினர்கள் முன்னிலையில் மாணவன் கேக்கை வெட்டியுள்ளார். பின்னர் உறவினர் ஒருவர் அந்த கேக்கை எடுத்து மாணவனுக்கு ஊட்டிவிட்டு, மீதம் உள்ள கேக்கை வெட்ட முயன்றபோது, கேக்கில் ஏதோ நெளிவதை பார்த்துள்ளார். என்ன என்று பார்த்தபோது கேக்கில் புழுக்கள் நெளிந்துள்ளது

  மேலும் கேக்கை உண்ட மாணவருக்கு வாந்தி மற்றும் லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே மாணவனின் உறவினர்கள் கேக்கை எடுத்துக்கொண்டு, கேக்கை வாங்கிய பேக்கரியில் சென்று கேட்டபோது கடையின் உரிமையாளர் சரிவர பதில் கூறவில்லை என கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் கடைக்காரரிடம் வாக்குவாதம் செய்ய தொடங்கினர்.

  இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார் பேக்கரியில் இருந்த உணவு பொருட்களை ஆய்வு செய்வதற்காக எடுத்துச்சென்றார்.

  ஆசையாக வாங்கிய பிறந்தநாள் கேக்கில் புழுக்கள் நெளிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari