
ஹிந்து தமிழ் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் தலைமையில் 27 அடி உயர வேல் பழநி வந்தது.திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயிலில் 27 அடி உயர வேல் பிரதிஷ்டை செய்ய உள்ளனர்.
இதையடுத்து அந்த வேலை முருகனின் அறுபடை வீடுகள் அமைந்துள்ள நகரங்களுக்கு ‘வேல் யாத்திரை’யாக கொண்டு செல்கின்றனர்.
இதையொட்டி 1,800 கிலோ எடையுள்ள 27 அடி உயரமான வேல் நேற்று முன்தினம் இரவு பழநி வந்தடைந்தது. நேற்று காலை பாத விநாயகர் கோயில், குடமுழுக்கு மண்டபம் அருகே மயில் வாகனம் முன்பு வேலுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இந்திய ராணுவ வீரர்கள், தமிழக காவல்துறைக்கு மன வலிமை ஏற்படுத்தும் இறையருளை வழங்க வேண்டும்’ எனக் கூறினர்.
தமிழக பிராமணர் சங்கத் தலைவர் ஹரிஹர முத்தையர், ஹிந்து தமிழ் கட்சி மாநில குழு உறுப்பினர் மனோஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். நவ.30ல் சிறுவாபுரி முருகன் கோயிலில் இந்த வேல் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.