Homeசற்றுமுன்ஏடிஎம்.,க்கு வித்திட்ட நம் கணிதமேதை வாழ்வில்..!

ஏடிஎம்.,க்கு வித்திட்ட நம் கணிதமேதை வாழ்வில்..!

mathematics day - Dhinasari Tamil
- Advertisement -
- Advertisement -

இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ATM க்கு காரணமான ஸ்ரீநிவாசனுக்கு பிறந்த நாள்.

ஆம் உலகம் போற்றும் #கணிதமேதைராமானுஜத்தின் பிறந்த நாள் இன்று.ஸ்ரீநிவாச ராமானுஜம் என்பதே முழு பெயர்.

நாமகிரி தாயார் மற்றும் நரசிம்மரின் பரிபூரண கடாக்ஷத்தால் தான் இந்த அபரிமிதமான தன்மை தன் பிள்ளைகளுக்கு என்று அவரது தாயார் ராமானுஜனை பற்றி அடிக்கடி சொல்லும் வார்த்தை இது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பட்ட துன்பம் வேறு யாரேனும் பட்டிருப்பார்களா என்பது சந்தேகமே.

பள்ளி படிப்பை வாலாஜாவில் பயின்றார். இன்றளவும் அந்த பள்ளி உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்கள் பலருக்கே இது குறித்து ஏதும் தெரியாத நிலையில் தான் இன்றைய சூழலில் உள்ளது. ராமானுஜனை பற்றி தெரிந்த சிலருக்கு அவர் கணிதத்தில் என்ன சாதித்தார் என்பது தெரியவில்லை.

அவர் கைப்பட எழுதிய கணித சூத்திரங்களில் எவ்வாறு விடைகளை கண்டறிந்தார் என்பது இன்று வரை புரியாத புதிர்.

ஓர் முறை பள்ளி பருவத்தில் நடந்தே சோளிங்கர் வரை சென்று அங்கு உள்ள குகை போன்ற போந்தில் இருந்து சில கணித தேற்றங்களுக்கு விடை எழுதியதாக குறிப்பிட்டுள்ளார். இன்று அந்த இடத்தில் அப்படி ஒரு இடம் இருந்ததற்கான அடையாளங்கள் இல்லாத வகையில் அந்த மலை குன்றே காணாமல் போய் விட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா????¿

ஆம் அது தான் இன்றைய நிதர்சனமான உண்மை. ஒன்று இரண்டு அல்ல 11 மலை குன்றுகள்…..
ஸ்வாஹா.
வேறென்ன திராவிட சாதனைகளில் இது எல்லாம் சர்வ சாதாரணம் அல்லவா.ஏதோ சாலை அமைப்பதற்கு மற்றைய பயன்பாட்டிற்கோ அல்ல…முற்று முழுதாக மலேசியா சென்று விட்டது.

என்ன செய்ய….
விஷயத்திற்கு வருவோம்.

கணிதத்தை தவிர மற்றைய பாடங்களில் அவருக்கு நாட்டம் இருந்தது இல்லை, பல சமயங்களில் மற்ற பாடங்களில் தேர்ச்சி பெற்றதும் இல்லை.ஆனால் கணிதத்தில் மட்டும் பித்து பிடித்த நிலை தான்.

அவருக்கு இந்த கணித ஆற்றல் பற்றின புரிதலே பல ஆண்டுகள் ஆனது.மீதி இதனை பற்றி மற்றவர்களுக்கு விளக்கவே சரியாக இருந்தது. வெறும் முப்பத்திரண்டு வயது வரை தான் வாழ்ந்தது. ஆனால் சாதித்தது பலதும் அதில் உண்டு. ஐன்ஸ்டீனின் சந்திக்க ஆசைப்பட்ட நபர் என்கிற ரீதியில் மாத்திரமே அன்று பலருக்கும் இவர் குறித்து தெரியும்.

👉இவரது கணித தேற்றங்களுக்கம், சமன்பாடுகளுக்குமான பிண்ணனி படு சுவாரசியமானது. இதில் இவரது தேற்றங்களை அடிப்படையிலான தந்திரங்களை கொண்டே நாஜி படையினர் தகவல் அனுப்ப பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர். அதுபோலவே அந்நாளில் செய்தி பரிமாற்றத்தை இடை மரித்து கேட்க பயன் படுத்திய தொழில்நுட்பத்தின் ஓர் அங்கம் தான் இன்றைய கணினி என்பது நம்மில் பலருக்கும் இன்றுவரை தெரியாது.

அவ்வாறே இதே பண்புகளின் மற்றோர் வடிவமைப்பு தான் இன்று நாம் பயன்படுத்தும் ATM களின் பணப்பரிமாற்றம் என்பதும் நமக்கு தெரியாது.

இதேபோல் மற்றொரு முக்கியமான பங்களிப்பு ஒன்று உண்டு. அது தான் இன்றைய நியூக்ளியர் டீகோடிங் அல்காரிதம்.
அமெரிக்க அதிபர் என்பதின் ஓர் அடையாள அங்கமாக இன்று பார்க்கப்படும் தொழில்நுட்பம்.

பாரதத்தின் தென் பகுதியில் உள்ள நாம் வான் கணித சாஸ்திரத்தில் கரை கண்டவர்கள். அதனால் தான் பிரதானமாக மூன்று வித வான் சாஸ்திர கணித முறை இன்று வரை நம்மிடம் உண்டு. உதாரணமாக நேற்றைய தினம் 21/12/20 வானில் அறிவியல் அற்புதம் ஒன்று நடந்தது. பூமியில் இருந்து பார்க்க சனி மற்றும் குரு கோள்கள் ஓரே நேர்கோட்டில் வருவது போன்ற தோன்றதை உண்டு பண்ணின ஓர் அற்புதமான நிகழ்வு.

இப்படி சொன்னால் சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.

ஜோதிட ரீதியாக சனிப் பெயர்ச்சி கடந்த ஜனவரி மாதத்தில் நடைப்பெற்றதாக திருக்கணித பஞ்சாங்கம் சொன்னது, ஆனால் இம்மாதம் வரும் 27 ஆம் தேதியன்று தான் சனிப்பெயர்ச்சி என்று வாக்கிய பஞ்சாங்கம் சொல்கிறது. இவற்றில் எது சரி என்றால் இரண்டுமே சரி என்பதே பதிலாக இருக்கும்.

இது எப்படி சாத்தியம் என்று கேள்வி கேட்டால் விளக்கம் சொல்ல பலர் தடுமாறுவர். அதன் சரியான அர்த்தம் ஒன்று வானில் நட்சத்திர மண்டலத்தில் நடப்பது, மற்றொன்று நாம் வாழும் பூமியில் இருந்து பார்க்க கிடைக்கும் கோணத்தில் அமைவது.

நேற்றைய நிகழ்வு அப்படி பட்ட ஒன்று தான்.

நாம் பூமியில் இருந்து பார்க்க கிடைத்த கோணத்தில் சனியும் குருவும் கிட்டத்தட்ட ஒரே நேர்கோட்டில் அருகில் உள்ளது போன்று தோன்றினாலுமே கூட நிஜத்தில் அவை இரண்டுக்கும் இடையே ஏகப்பட்ட தொலைவு இருந்தது.

சரி உங்களிடத்தில் ஓர் கேள்வி?
வான் சாஸ்திரத்தில் வித்தகர்களாக இருந்த நாம் ஏன் சனி கோள் வரை மாத்திரமே வைத்து கணிதம் செய்து கொண்டு இருக்கிறோம். இன்று உள்ள அறிவியல் வளர்ச்சியில் எண்ணற்ற நட்சத்திர மண்டலங்களை, மற்றும் பல கோள்களை கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலும் தற்போது நாம் இன்னமும் அதே ஒன்பது கிரகங்களை மாத்திரமே பயன் படுத்தி கணிதம் செய்திடும் முறை சரியா??????

-ஜெய் ஹிந்த் ஸ்ரீ ராம்

- Advertisement -

Most Popular

உரத்த சிந்தனை :

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,080FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,940FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

மக்கள் பேசிக்கிறாங்க

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Cinema / Entertainment

குடும்பத்தோடு பொங்கல்.. புன்னகை இளவரசி கூறிய வாழ்த்து!

தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சினேகா. அதனைத் தொடர்ந்து...

கிளைமேக்ஸை மாத்த சொன்ன விஜய்.. ஹீரோவை மாத்தி ஹிட் கொடுத்த டைரக்டர்!

விஜய் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் அவருடைய படங்கள் அவ்வளவாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.அப்பொழுது...

Ak கேட்டு ஓகே ஆனாராம் இவர்..! 61 அப்டேட்!

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார்....

சங்கராந்தி வாழ்த்துக் கூறிய பிரபல நடிகர்! குடும்பத்துடன் புகைப்படம் வைரல்!

நடிகர் விஜய் தேவர கொண்டாவின் சங்கராந்தி தின புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. நடிகர் விஜய்...

Latest News : Read Now...