மதுரையைச் சுற்றி ஒரே நாளில் இத்தனை… க்ரைம்!

Published:

crimes scene - 2026
crime-beat

பெருங்குடியில் துப்பாக்கியுடன் வாலிபர் கைது

மதுரை: பெருங்குடியில் துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெருங்குடி போலீசார் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.இவர் பரம்புப்பட்டியில் ரோந்து பணியில் சென்ற போது மேல தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் முருகன் 24 என்ற வாலிபர் போலீசை கண்டதும் ஓடத் தொடங்கினார். அவரை விரட்டி பிடித்தனர்.பின்னர் அவரிடம் சோதனை செய்தபோது அவர் 5 அடி நீளமுள்ள நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.அவர் எங்கிருந்து துப்பாக்கி வாங்கினார்,எதற்காக துப்பாக்கியுடன் பதுங்கிஇருந்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பெருங்குடியில் கண்மாயில் தவறிவிழுந்த பெண் தண்ணீரில் மூழ்கி பலி: போலீஸ் விசாரணை!

மதுரை: பெருங்குடியில் கண்மாயில் தவறி விழுந்து பெண் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை அருகே ஓ.ஆலங்குளத்தை சேர்ந்தவர் வீரபாண்டி மனைவி சசிகலா 34 .இவர் அதிகாலை கண்மாய் கரையோரம் சென்றார். அப்போது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானார்.இந்த சம்பவம் குறித்து அவருடைய அண்ணன் தாமோதரன் பெருங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகலாவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

அடுத்தடுத்து பரிட்சையில் பெயில் ஆனதால்
பிளஸ் டூ மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரை : தேர்வில் அடுத்தடுத்து பெயில் ஆனதால் மனமுடைந்த பிளஸ் டூ மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒத்தக்கடை நாஞ்சில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் ஆகாஷ் 18 .இவர் பிளஸ் டூ தேர்வில் அடுத்தடுத்து பெயில் ஆகி விட்டார்.இந்நிலையில் மீண்டும் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். இதனால் மனமுடைந்து வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மாணவணின் அம்மா ஜெயலட்சுமி ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கீரைத்துறையில் வாலிபரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி பிளேடால் தாக்குதல் 3 பேருக்கு வலைவீச்சு!

மதுரை: கீரைத் துறையில் வாலிபரின் கண்ணில் மிளகாய் பொடி தூவி பிளேடால் தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லாபுரம் கொத்தனார் தொப்புவை சேர்ந்தவர் முருகேசன் 55. இவரது உறவினர் ராஜ ஜெயந்தன். முருகேசனின் மகனுக்கும் ராஜஜெயந்தனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கொத்தனார் தோப்பு வில் முருகேசனின் மகனை வழிமறித்து ராஜஜெயந்தன், மணி ,டிராவிட், ஆகியோர் மிளகாய் பொடியை தூவி விட்டு பிளேடால் தாக்கி விட்டு ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்துமுருகேசன் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்ள் மூவரையும் தேடி வருகின்றனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

குடிபோதையில் அக்காவை அரிவாளால் வெட்டிய தம்பி கைது

மதுரை: குடிபோதையில் அக்காவை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீசார் கைது செய்தனர் .
பழைய விளாங்குடி டீச்சர்ஸ் காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் பழனி மனைவி நித்திலா 24 .இவரது தம்பி குமார்23. இவர் குடிபோதையில் வந்து அக்காவை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து நித்திலா கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அக்காவை வெட்டிய தம்பியை கைது செய்தனர்.


அவனியாபுரத்தில் அல்சர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் விஷம் குடித்து தற்கொலை

மதுரை டிச 21 வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் முத்து மணிகண்டன் 34 இவருக்கு அல்சர் நோய் இருந்தது மஞ்சள் காமாலைநோயும் இருந்தது. இதனால் மனமுடைந்த முத்து மணிகண்டன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

கோரிப்பாளையத்தில் பெண் உள்பட 2 பேரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

மதுரை : கோரிப்பாளையத்தில் பெண் உள்பட 2 பேரிடம் செல்போன் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர் .
திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் சந்தியா 24 இவர் கோரிப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் நின்ற போது இவர் வைத்திருந்த செல்போனை இருவர் பறித்து சென்று விட்டனர். இவரைப்போல முடுவார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி 45. இவர் கரிமேட்டிலிருந்து கோரிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்தபோது அவரிடம் இருந்த செல்போனையும் பறித்து சென்று விட்டனர் .இந்த சம்பவம் குறித்து இருவரும் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் செல்போன் பறித்த முடுவார்பட்டி ஆதனூரைச் சேர்ந்த பாண்டித்துரை 41, திண்டுக்கல் மேட்டுக்கடை யைச் சேர்ந்த பாலமுருகன் 31 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


Related articles

Recent articles

spot_img