
நடிகை கஸ்தூரி முதன்முறையாக தனது மகனின் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
சின்னவர், அமைதிப்படை, இந்தியன் என 90-களில் வெளியான பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை கஸ்தூரி.
2000-ல் திருமணம் செய்துக் கொண்ட அவர் பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அதோடு சின்னத்திரையில் சீரியல்களிலும், நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் கவனம் செலுத்தி வருகிறார்.
மருத்துவர் ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட இவருக்கு ஒரு மகளும், மகனும் இருக்கிறார்கள். இதில் கஸ்தூரியின் மகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டவர். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் கஸ்தூரி அவ்வப்போது கருத்து சொல்லி சர்ச்சைகளிலும்யிலும் சிக்குவார்.
நெட்டிசன்களும் அவரை சும்மா இருக்கவிடாமல், எல்லா விஷயங்களுக்கும் அவரை டேக் செய்து கருத்து கேட்பார்கள். தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு வரை இது தொடர்ந்தது. இந்நிலையில் தன் மகனின் படத்தை முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் கஸ்தூரி. அதோடு, எனது ரீல் மகனுடன், ரியல் மகன்.. யார் அது என கண்டுப்பிடியுங்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், சாம்பல் நிற டி-ஷர்ட்டில் இருப்பது தான் உங்கள் நிஜ மகன் என கமெண்டுகளில் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அதற்கு கஸ்தூரி இன்னும் பதில் சொல்லவில்லை.
https://www.instagram.com/p/CY60Zvxv7Rd/?utm_source=ig_embed&utm_campaign=loading