![இளம் தாய்க்கு அக்குளில் சுரந்த பால்.. மருத்துவர்கள் கூறும் காரணம்! 1 armpit milk](https://dhinasari.com/wp-content/uploads/2022/02/armpit-milk-1024x468.jpg)
சமூகவலைத்தளங்களில் மிக வித்தியாசமான வீடியோக்கள் டிரெண்டாவது வழக்கமான ஒன்று தான், அந்த வகையில் சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் தன்னுடைய அக்குளில் பால் சுரப்பதாக தெரிவித்துள்ளார்.
Lindsay White என்ற பெண் சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ வைரலாகி வருகிறது, அந்த வீடியோவில் தன்னுடைய அக்குளில் இருந்து தாய்ப்பால் சுரப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில், ஒருநாள் தன்னுடைய மகள் Allieக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போது அவளுடைய தலை ஈரமாகிவிட்டதாம், அக்குள் வியர்வையால் நடந்திருக்கலாம் என எண்ணியிருந்த நிலையில், பால் சுரப்பதை கவனித்துள்ளார்.
உடனடியாக மருத்துவரிடம் கலந்து ஆலோசித்த போது, அவர்கள் அளித்த விளக்கம் பின்வருமாறு,
மார்பகத்துக்குரிய செல்கள் அக்குளிலும் வளரும், சிலருக்கு பால் காம்பும் வளரும், ஒரு சிலருக்கு எந்த அறிகுறியும் தென்படாது.
கர்ப்பம் தரிக்கும்போது தான், அக்குளில் இருக்கும் மார்பக செல்களும், பால் சுரப்பியும் செயல்படத் தொடங்கும்.
குழந்தை பிறந்ததும் பால் சுரக்கும். அப்போதுதான், தங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு குறை இருப்பதே, சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தெரியும்.
குழந்தை வளரத் தொடங்கியதும் தானாகவே அக்குள் மார்பகத்திலும் பால் சுரப்பது நின்று விடும்.
இந்த அரிய உடல் மாற்றத்துக்கு ‘பாலிமஸ்ஷியா’ என்று பெயர் என தெரிவித்துள்ளனர்.
மேலும் தனது மகன் Kodaயை பெற்றெடுத்த போது இரண்டு அக்குள்களில் இருந்தும் பால் சுரந்ததாக தெரிவிக்கிறார் Lindsay White.