spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்அளவு குறைந்த ஆவின் பால் பாக்கெட்டுகள்... எதிர்க் கட்சியாக இருக்கும் போது கண்டனம், ஆளுங் கட்சியான...

அளவு குறைந்த ஆவின் பால் பாக்கெட்டுகள்… எதிர்க் கட்சியாக இருக்கும் போது கண்டனம், ஆளுங் கட்சியான பிறகு மெளனம்!

- Advertisement -

“அளவு குறைந்த ஆவின் பால் பாக்கெட்டுகள் குறித்து, எதிர்க்கட்சியாக இருக்கும் போது கண்டனம் தெரிவிப்பதும், ஆளுங்கட்சியான பிறகு மெளனம் சாதிப்பதும் திமுக.,வின் வாடிக்கையாக இருக்கிறது என்று, பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில்…

கோவை, திருப்பூர், மதுரை, நாகர்கோவில், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம் உள்ளிட்ட 25 ஆவின் ஒன்றியங்களிலும், இணையத்திலும் இயந்திர தளவாடங்கள் கொள்முதல், பால் கொள்முதல், பால் பவுடர் உற்பத்தி, பால் பொருட்கள் விற்பனை, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும், ஊழியர்கள் பணி நியமனங்களிலும் கடந்த அதிமுக ஆட்சியிலும் சரி, தற்போதைய திமுக ஆட்சியிலும் சரி ஊழல், முறைகேடுகள் அரங்கேறி வருவது தொடர்பாக ஆதாரங்களுடன் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போதெல்லாம் பொங்காத கழக உடன்பிறப்புகள் தற்போது ஆவின் பால் பாக்கெட்டில் அளவை குறைத்து மோசடி நடைபெற்ற செய்திக்கு மட்டும் பொங்கோ பொங்கென்று பொங்குவதை காணும் போது பத்தாண்டுகள் அகோர பசியில் இருந்த நிலையில் தற்போது விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும் தங்களின் ரகசியம் உலகிற்கே தெரிந்து விட்டதே என்கிற அதிர்ச்சி அவர்களின் பதிவுகளில் வெளிப்படுகிறது.

மேலும் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 500மிலி ஆவின் பால் பாக்கெட் 400மிலி ஆக அளவு குறைவாக விநியோகம் செய்யப்பட்ட போது அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆவின் நிர்வாகத்தையும், அதிமுக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போதும் அதே சூழலில் அளவு குறைவாக விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட் தொடர்பாக அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தும் கூட இதுவரையிலும் முதல்வர் அவர்கள் வாய் திறவாமல் மெளனமாக இருப்பதும், துறை சார்ந்த அமைச்சரோ தனது பால்வளத்துறை மூலம் அறிக்கை வெளியிடாமல் தான் சார்ந்துள்ள கட்சியின் ஐடி விங்க் மூலம் செய்திகளை பரப்பிக் கொண்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

எதிர்க்கட்சியாக இருக்கும் போது மட்டும் ஆவினில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து பேசியதும், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது குறைந்தபட்சம் தற்போது நிகழும் முறைகேடுகள் குறித்து கூட துறை சார்ந்த அதிகாரிகளையும், அமைச்சரையும் கண்டிக்காமலும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமலும் இருப்பது ஏற்புடையதல்ல என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

பால் உற்பத்தியாளர்களின் உழைப்பில் உருவாகி, பால் முகவர்களின் உழைப்பால் இயங்கி வரும் ஆவினில் நாளொரு ஊழலும், பொழுதொரு முறைகேடுகளுமாக நடைபெற்று வரும் நிலையில் அதனை முற்றிலுமாக சரி செய்ய தமிழக முதல்வர் அவர்கள் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் … என்று குற்ப்பிட்டுள்ளார்.

இணைப்பு :- அளவு குறைவாக விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் வெளியிட்ட கண்டன அறிக்கை … பார்வைக்கு. 2015ல்… லிங்க்

அளவு குறைந்த பால் ஆவின் பால் பாக்கெட்டுகளில் விநியோகிக்கப்படுகிறது என்று வெளிவந்துள்ள செய்தி வருத்தமளிப்பதாக இருக்கிறது. அரை லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டில் 500 மில்லி லிட்டர் பால் அளவு இருப்பதற்குப் பதில் 400 மில்லி லிட்டர்தான் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு ஆவின் பால் நுகர்வோர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே ஆவின் பால் தேவைப்படும் மக்களுக்குப் போதிய அளவில் ஆவின் பால் அட்டைகள் வழங்கப்படுவதில்லை என்ற புகார் இருக்கிறது. இந்நிலையில், பாலின் அளவையும் குறைவாகக் கொடுப்பது அவர்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் ஆவின் நிர்வாகம் செயல்படும் விதம் வினோதமாக இருக்கிறது. முதலில் ஆவின் பாலில் கலப்படம் செய்தார்கள். பிறகு பால் தயாரிப்பாளர்களிடமிருந்து முழு பாலையும் கொள்முதல் செய்ய மறுத்தார்கள். இப்போது பாக்கெட் அளவை விட குறைந்த அளவு பால் நிரப்பி ஆவின் பால் விற்பனை செய்கிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேல் இதே ஆவின் நிர்வாகம்தான் பாலின் விலையை லிட்டருக்கு 16 ரூபாய்க்கு மேல் செங்குத்தாக உயர்த்தி வாடிக்கையாளர்களை வதைத்தது என்பதும் இங்கே நினைவுகூறத்தக்கது. இது மட்டுமின்றி, ஆவின் பால் பாக்கெட்டுகள் தரமற்ற பிளாஸ்டிக் மூலம் தயார் செய்யப்படுகிறது என்ற புகாரும் வந்திருக்கிறது. இப்படி குறைவான பால், அதிக விலை என்றெல்லாம் ஒரு ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்கி, ஆவின் பால் வாங்கும் மக்களை தனியார் பால் வாங்கும் நிலைமைக்கு அரசே தள்ளுவது மட்டுமின்றி, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தை விட தனியார் பால் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கு வழி வகுக்கும் வகையில் அ.தி.மு.க. அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆகவே அளவு குறைந்த பால் கொடுக்கப்படுகிறது என்ற புகாரை விசாரித்து வாடிக்கையாளர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று ஆவின் நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறேன். ஆவின் பால் அடைக்க கொள்முதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் தரமுடன் இருக்கிறதா என்பதை அறிய உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். ஆவின் பால் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், அது மட்டுமின்றி கைக் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் அனைவருக்குமே ஆவின் பால் மிகவும் பாதுகாப்பானது என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாமல், தரமான அதே நேரத்தில் சரியான அளவில் ஆவின் பால் கிடைப்பதை அ.தி.மு.க. அரசு உறுதி செய்ய வேண்டும்.

It is highly deplorable that Aavin sachets containing milk have been reported to contain less quantity than what is printed on the sachet. There have been widespread complaints of people getting only 400 ml of milk instead of 500 ml, which is printed on the sachet. Additionally, even card distribution for availing consumer subsidy has reportedly been inadequate and has not reached the people who really need them. It is interesting how under the ADMK administration, Aavin first adulterated milk with water, then refused to procure milk from producers and is now selling less milk than what is printed on the sachets. Furthermore, this administration was also responsible for drastically increasing the price of milk by over Rs. 16 per litre. It had recently also come to light that the quality of plastic used for the milk packets is substandard. The ADMK government is practically forcing Aavin consumers to switch over to private milk suppliers, thereby helping the private milk sector grow at the cost of government-owned Aavin and dairy farmers. I appeal to the ADMK government to immediately address the grievances of Aavin consumers and give them justice. I also demand that a probe in the procurement of plastic packets for Aavin milk be conducted. One must understand that Aavin milk is widely consumed and is also generally considered safe for consumption by infants, children, senior citizens and ailing people. The ADMK government cannot betray the people of the state and must take all measures to strengthen the supply of quality milk.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,163FansLike
386FollowersFollow
91FollowersFollow
0FollowersFollow
4,901FollowersFollow
17,200SubscribersSubscribe