திருவனந்தபுரத்தில் தென் மாநில முதல்-மந்திரிகள் கூட்டம், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் இன்று தொடங்கியுள்ளது .
தென் மாநில முதல்-மந்திரிகள் கூட்டம், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்கள் தென் மண்டல கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றன.இந்த தென் மண்டல கவுன்சிலில் இடம் பெற்றுள்ள தென் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கூட்டம், கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது.
இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பசவராஜ் பொம்மை (கர்நாடகம்), ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா), சந்திரசேகரராவ் (தெலுங்கானா) ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பொதுவான பிரச்சினைகளான நதிநீர் பகிர்வு, கடலோர பாதுகாப்பு, இணைப்பை ஏற்படுத்துதல், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.
தென் மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தில் எல்லை தொடர்பாக பிரச்சினைகள், பாதுகாப்பு, சாலை, போக்குவரத்து, தொழில், நீர், எரிசக்தி, காடு, சுற்றுச்சூழல், வீட்டு வசதி, கல்வி, உணவு பாதுகாப்பு, சுற்றுலா, போக்குவரத்து உள்ளிட்ட பல விஷயங்களும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.