தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் மெயினருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து.சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அதன் காரணமாக அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலை சீசனை ஒட்டி குற்றாலத்துக்கு வந்து செல்லும் பயணியர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கோவை, திருப்பூர், தேனி,தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் 29-11-2022 காலை 0830 மணி முதல் 30-11-2022 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
ஊத்து (திருநெல்வேலி) 9; ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) 7;
கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), சிவகிரி (தென்காசி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 6;
பர்லியார் (நீலகிரி), கீழ் கோதையார் ARG, அடையாமடை (கன்னியாகுமரி), நாலுமூக்கு (திருநெல்வேலி), கருப்பாநதி அணை (தென்காசி) தலா 5;
பாபநாசம் (திருநெல்வேலி), கடம்பூர், கயத்தாறு, குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) அழகரை எஸ்டேட் (நீலகிரி), பில்லூர் அணை (கோவை) தலா 3;
இராஜபாளையம், சிவகாசி (விருதுநகர்), அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி (திருநெல்வேலி), ராம்நாடு அக்ரோ (இராமநாதபுரம்), காயல்பட்டினம் (தூத்துக்குடி), புத்தன் அணை, பெருஞ்சாணி அணை, தக்கலை (கன்னியாகுமரி), பில்லிமலை, ஆதார் எஸ்டேட், குன்னூர் PTO (நீலகிரி) தலா 2;
ஆண்டிபட்டி (மதுரை), வீரபாண்டி (தேனி), வத்ராயிருப்பு, வெம்பக்கோட்டை (விருதுநகர்), இராமநாதபுரம், தீர்த்தண்டாத்தனம், வட்டானம் (இராமநாதபுரம்), திருச்செந்தூர் (தூத்துக்குடி), கன்னிமார் (கன்னியாகுமரி), கோத்தகிரி, குன்னூர் (நீலகிரி), வால்பாறை PTO (கோவை) தலா 1.