December 7, 2025, 11:37 PM
24.6 C
Chennai

பாஜக., முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: வாராணசியில் மீண்டும் மோடி போட்டி!

BJP 2022 10 29 - 2025
#image_title

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக., இன்று வெளியிட்டது. தலைநகர் தில்லியில் பாஜக., வெளியிட்ட அறிவிப்பில் 195 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாயின வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். அமித் ஷா காந்தி நகரில் போட்டியிடுகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக., முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில், 195 இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்தப் பட்டியலில் 28 பேர் பெண்கள், பட்டியலினத்தவர்- 27, ஓபிசி- 57 பேர் என, வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், வாராணசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார்.

பாஜக., இன்று வெளியிட்ட 195 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 42 இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

உ.பி.யில் 51, ம.பி.யில் 24, மேற்கு வங்காளத்தில் 20, குஜராத்தில் 15, கேரளாவில் 12, சத்தீஸ்கரில் 11, தில்லியில் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் 34 மத்திய அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 47 இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 28 பெண் வேட்பாளர்கள் இதில் அறிவிக்கப்பட்டனர்.

பிரதமர் மோடி- வாரணாசி, அமித்ஷா- காந்தி நகர், மன்சுக் மாண்டவியா- போர்பந்தர், அருணாச்சல பிரதேசம் மேற்கு- கிரண் ரிஜூஜூ, பன்சுரி ஸ்வராஜ்- புதுடெல்லி, அர்ஜூன் முண்டா- குந்தி, ஜார்க்கண்ட் ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றனர்

அஸ்வினி- காசர்கோடு, கேரளா, நடிகர் சுரேஷ் கோபி- திருச்சூர், அப்துல் சலாம்- மலப்புரம், கேரளா, மத்திய அமைச்சர் சந்திர சேகர்- திருவனந்தபுரம், கேரளா, மத்திய அமைச்சர் முரளிதரன்- ஆட்டிங்கால், கேரளா ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றனர்.

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா- குணா, மத்திய பிரதேசம், முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்- விதிஷா, மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றனர். நடிகர் சுரேஷ் கோபி கேரளாவின் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இது குறித்து பாஜக,. தேசிய பொது செயலாளர் வினாத் தாவ்டே கூறியபோது, “முதற்கட்டமாக 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.” என்றார்.

தமிழகத்துக்கு வேட்பாளர் ஒருவரும் அறிவிக்கப்படவில்லை. காரணம், இன்னும் கூட்டணி இறுதி செய்யப்படாத நிலையிலும், வரும் மார்ச் 4ம் தேதி பிரதமர் சென்னையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாலும், முதற்கட்ட வேட்பளர் பட்டியலில் தமிழகத்தினைச் சேர்ந்த எவரும் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, கூட்டணி இறுதி செய்யப் பட்டதும், அடுத்தகட்ட பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories