பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரானவரும் மாநிலங்களவை எம்.பி- யுமான சுப்பிரமணியன் சுவாமி மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை உடனடியாக நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர்மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் ரகுராம் ராஜன் இந்திய பொருளாதாரத்தை அழிவுப் பாதையில் கொண்டு செல்வதற்கு வேண்டுமென்றே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் என்றும் அவருடைய இருதயம் முழுமையாக இந்திய நாட்டுடையதாக இல்லை என்று சுப்ரமணியன் சுவாமி அந்த கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
சிகாகோ பல்கலைக் கழக பேராசிரியரான ரகுராம் ராஜன் செப்டம்பர் 2013-ல் ஆர்பிஐ கவர்னராக பொறுப்பேற்றார். ரிசர்வ் வங்கி கொள்கையில் பல்வேறு ரகுராம் ராஜனுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீண்ட காலமாகவே முரண்பாடு இருந்து வந்தது .
கருத்து சுதந்திரம் மற்றும் மதச்சார்பின்மை சிக்கல் நிலவிய போதும் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து ரகுராம் ராஜன் சில விமர்சனங்களை கூறியிருந்தார்.
இந்நிலையில், ரகுராம் ராஜனுக்கு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்க தகுதியில்லை என்று பா.ஜ.க மூத்த தலைவரும் அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி-யுமாக சுப்ரமணியன் சுவாமி சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்தார்.
மேலும், வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார தொழில்துறை வீழ்ச்சி ஆகியவற்றுக்கு ரகுராம் ராஜனே காரணம் என்று சுப்பிரமணியன் சுவாமி கடும் விர்சனம் செய்து இருந்தார்.
இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் ரகுராம் ராஜனின் பதவி காலத்தை உடனடியாக முடித்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சுப்ரமணியன் சுவாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட ரூ.570 கோடி பண விவகாரம் தொடர்ந்து கொண்டே உள்ள நிலையில் சுப்பிரமணியன் சுவாமி வேற ரிசர்வ் வங்கி ஆளுநரை ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை உடனடியாக நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர்மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.