இந்திய வரைபடத்தை தவறாக வெளியிடுபவர்களுக்கு 100 கோடி ரூபாய் வரை அபராதம்

Published:

இந்திய தேசிய வரைபடத்தை தவறுதலாக வெளியிடுபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இந்திய அரசு கொண்டுவந்துள்ள வரைவு மசோதா குறித்து பாகிஸ்தான் கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தானின் ஐ,நா பிரதிநிதி, ஐ.நா. பொது சபையின் பொதுச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள தேசிய புவியமைப்பு தகவல் ஒழுங்குமுறை மசோதா நிறைவேற்றலை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
மேலும, பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் பகுதி இந்திய வரைபடத்தில் இடம் பெற்றுள்ளதாகவும், இது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
அண்மையில் மலேசியா வெளியிட்ட இந்திய வரைப்படத்தில் அருணாச்சல பிரதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இடம்பெறவில்லை.  இதையடுத்து இந்திய தேசிய வரைபடத்தை வெளியிடும் முன் அது மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுள்ளதா என்பதை ஆராய்ந்து வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான புதிய சட்ட வரைவு மசோதாவையும் மத்திய அரசு குழு தயாரித்துள்ளது. இந்த மசோதாவில் இந்தியாவின் வரைப்படத்தை தவறாக வெளியிடுபவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Related articles

Recent articles

spot_img