மாம்பழ மில்க் ஷேக்
தேவையானவை:
குளிர வைத்த பேக்கட் பால் – 4 கப், மாம்பழக் கூழ் – ஒரு கப்,
சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்,
மாம்பழ எசன்ஸ் – சில துளிகள்,
கேசரி ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை,
ஐஸ் துண்டுகள் – தேவையான அளவு.
செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் போட்டு நுரை வரும் வரை அடித்து, கிளாஸில் ஊற்றி பரிமாறவும். தேவையானால், சில மாம்பழத்துண்டுகளை மேலே போட்டு கொடுக்கலாம்.