December 6, 2021, 10:12 am
More

  அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

  health tips 1
  health tips 1

  உட்சூடு நீங்க…

  உடலில் ஏற்படும் உட்சூடு, மேகம், ஆண்களின் உறுப்பில் ஏற்படும் இரணம். நீரிழிவு, நாவறட்சியைப் போக்குவதில் வெள்ளை அல்லி சிறந்து விளங்குகிறது. இப்பூவின் சர்பத் சாப்பிட்டு வர மேற்சொன்ன பிணிகள் நீங்குவதுடன் அதிக வெப்பத்தால் ஏற்படும் கண் நோய்களும் விலகும்.

  கணைச்சூடு உள்ளவர்கள் தினமும் சுத்தமான தேனை வெது வெதுப்பான நீரில் கலந்து சாப்பிட்டு வரலாம். உணவில் அதிக வெங்காயம் சேர்த்துக் கொள்வது நவம்.

  வெள்ளரிப்பிஞ்சை பச்சையாக மிளகுத் தூள் கலந்தும் சமைத்தும் சாப்பிட உடல் உஷ்ணம் குறையும்.

  கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் தேக உஷ்ணத்துக்கு, நெருஞ்சி முள் செடி இரண்டு. அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து சுத்தம் செய்து நசுக்கி மண் சட்டியிலிட்டு கஷாயம் வைத்து வடிகட்டி வேளைக்கு 2 அவுன்ஸ் வீதம் மூன்று வேளை மூன்று நாள்கள் குடிக்க குணமாகும்.

  பருப்புக் கீரையை (கோழிக்கீரை) சமைத்துச் சாப்பிட உடல் குளிர்ச்சியடையும். கண்கள் ஒளி பெறும். குளிர்ந்த உடல் உடையோர் இதனுடன் மிளகும் சீரகமும் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

  உடல் காங்கை நீங்க…

  அன்றலர்ந்த அகத்திப்பூ முப்பது கிராம் அளவு எடுத்து ஒரு கோப்பை பசும்பாலில் போட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்து ஒரு வாரம் சாப்பிட உடல் காங்கை நீங்கும்.

  உடல் வலிக்கு…

  புளிய இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதை வெதுவெதுப்பாக ஆறவைத்து குளிக்க உடல் வலி குணமாகும்.

  யூக்கலிப்ட்ஸ் இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்துக் குளித்தாலும் உடல் வலி நீங்கும்.

  கை, கால் அசதிக்கு முருங்கை ஈர்க்குகளை நறுக்கிப் போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட சரியாகும்.

  உடல் அளிப்புக்கு…

  கீழா நெல்லி இலையைப் போதுமான அளவு எடுத்து அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்துவர உடலில் ஏற்படும் அரிப்பு, சிறு புண்கள் நீங்கி விடுகின்றன.

  உப்பைத் தூள் செய்து உடல் முழுவதும் தடவி சற்று ஊற விடுங்கள். அதன் பிறகு வெந்நீரில் குளிக்க உடல் அரிப்பு உடனே குணமாகி விடும்.

  உடம்பில் சொரிந்தால் கண்டு கண்டாக வீங்கி விடும். அதற்கு சுண்ணாம்பு நீர் 10 அவுன்ஸ், நல்லெண்ணெய் 5 அவுன்ஸ் இரண் டையும் கவந்தால் தயிர் போலாகும். அதை உடலில் பூசி உலர்ந்த பிள் கசகசா அரைத்து அதன் மேல் பூசி அரைமணி நேரம் ஊற வைத்து வெந்நீரில் குளித்து வர சரியாகி விடும்.

  உறுதி பெற…

  ஆண் குறி மிகவும் உறுதி பெற அமுக்கராக்கிழங்கு, வசம்பு. எட்டிக் கொட்டை இவற்றைச் சம அளவு எடுத்து பசும்பால் விட்டு நன்றாக அரைத்து குறியின் மீது ஒரு வாரம் பற்றுப் போட்டு வந்தால் போதும் மிகுந்த வலுவடையும்.

  உதட்டில் புண்ணா?

  அடிக்கடி நாக்கிலும் உதட்டிலும் புண் ஏற்பட்டால் அத்திப்பழம் சாப்பிட குணமாகும். அத்திப்பழம் இரத்த சுத்தி செய்யவல்லது.

  கடுக்காய்த் தூளும் காசுக்கட்டித் தூளும் சமமாகச் சேர்த்து வெண்ணெய் கலந்து நாக்கில் தடவி வர நாக்கு ரணம் ஆறிவிடும்.

  உடம்பில் வெண் புள்ளிகளா?

  வெண் கொடி வேலி வேரை குன்றிமணியிலைச் சாற்றில் அரைத்து வெண்ணிறமுள்ள பகுதிகளில் சுமார் 6 வாரங்கள் வெளிப்பூச்சாக உபயோகித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

  வெண் குஷ்டம் ஆரம்ப நிலையில் இருந்தால் வெள்ளை நிற சங்குப்பூச் செடியின் வேரை எடுத்து நன்றாக அரைத்து அந்த இடத்தில் நாள்தோறும் மூன்று வேளை தடவி வர சில நாள்களில் வெண்ணிறம் மறையத் தொடங்கும்.

  பருத்திப் பூவையும் அதன் பட்டையையும் நன்றாக அரைத்து வெண் குஷ்டத்தின் மேல் தடவிவர ஆரம்ப நிலையில் உள்ள வெண் குஷ்டம் நீங்கி விடும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,107FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,799FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-