
-> கருத்து: செல்வநாயகம்
ஜீ தொலைக்காட்சி விவகாரம் பற்றி பாண்டே, “தமிழகத்தில் ஊடகம் முழுக்க இப்படித்தான் ‘மோதி விரோதம்’ இருக்கிறது. பாஜகவுக்கு 5% வேண்டுமானால் ஆதரவு இருக்கலாம். பெரும்பாலும் எதிர்ப்பே. அதற்கு பாஜக எதிர்க்கருத்து சொல்வதே முறை. நடவடிக்கை பலனளிக்காது. அந்த குழந்தைகளை உபயோகித்தவர்களுக்கு மோதி ஜி என்னென்ன நல்லது செய்திருக்கிறார் என்பதை எடுத்து சொல்லலாம் பாஜக” என்ற ரீதியில் பேசியிருக்கிறார்.
பாண்டே சொல்வது போல தமிழக பாஜக ‘கருத்து சுதந்திரத்தில்’ தலையிடவில்லை. மாறாக, குழந்தைகளை அரசியலுக்கு பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதே விஷயம்.
“குழந்தைகளை அம்மாதிரி உபயோகித்தது சட்டப்படி குற்றம். NCPCR களத்தில் இறங்கினால் பிரச்சினை பெரிதாகும்” என்பது தெரிந்து தான் ஊடகங்கள், “பாசிச பாஜக ஊடக சுதந்திரத்தில் தலையிடுகிறது” என்று கூவுவதை விட்டுவிட்டன.
ஊடகம் என்று சொல்லும் போது – செய்தி ஊடகம் & பொழுது போக்கு ஊடகம் என்று பிரிக்கலாம். செய்தி ஊடகங்கள் ‘புரளிகளை’ செய்தியாக வெளியிடுகின்றன. கேட்டால், “இது தான் எங்களுக்கு கிடைத்த செய்தி” என்று கூறிவிடுவார்கள் – நக்கீரன், புதிய தலைவலி, சூரிய டிவி, கொலைஞர் டிவி போல. அவற்றை தணிக்கை செய்வது கடினம். (புதிய சட்டத்தின் மூலம் அவர்களுக்கு மூக்கணாங்கயிறு போட்டது மோதி அரசு. அதற்கு ஸ்டே வாங்கியிருக்கிறார்கள் கிண்டு ராம், டி என் கிருஷ்ணா போன்றோர். விரைவில் ஸ்டே விலகும்).
ஆனால், ஜீ தமிழ் போன்ற பொழுபோக்கு ஊடகங்கள் – போலி செய்தி பரப்ப முடியாது. ஆபாச விஷயங்களையும் ஒளிபரப்ப முடியாது. பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை அவை. குழந்தைகளை உபயோகிக்கும் போது 2011இல் போட்ட NCPCR சட்டம் அவர்களுக்கு பிரச்சினையை உருவாக்கும். அதில் தான் சிக்கிக் கொண்டது கூட்டம்.
ஜீ தமிழ் மீது ஒலிபரப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க முடிவெடுத்தால், “அந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் பொறுப்பல்ல. அந்த குழு முழுக்க ஜீ தமிழ் தொலைக்காட்சியின் கட்டுப்பாடுகளை, விதிமுறைகளை மீறி ஒளிபரப்பு செய்து விட்டார்கள். அவர்கள் பணி நீக்கம் செய்துள்ளோம்.” என்று சொல்லி தப்பிக்கலாம். அதோடு, “அவர்கள் மீது காவல்துறை மூலம் கிரிமினல் நடவடிக்கை எடுக்க புகாரளித்திருக்கிறோம்” என்று முடித்தால், பிற ஊடகங்களிலும் கொஞ்சம் பயம் வரும்.
ஊடகங்களின் முக்காடு அரசியல் | பாண்டே பார்வை | Rangaraj Pandey on Media Politics | Zee Tamil | BJP