
கோலா உருண்டை
தேவையான பொருட்கள்:
முற்றிய வாழைக்காய் – ஒன்று கடலைப்பருப்பு – அரை கப் பொட்டுக்கடலை – கால் கப்
பச்சை மிளகாய் – 3 பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2
சோம்பு – ஒரு டீஸ்பூன்
கசகசா – ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் புதினா – ஒரு கைப்பிடி அளவு
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கடலைப்பருப்பை எண்ணெய்விட்டும் பொட்டுக்கடலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய்த் துருவலை எண்ணெய் இல்லாமலும் வறுத்து பச்சை மிளகாய், புதினா, உப்பு சேர்த்து அரைக்கவும். வாழைக்காயைத் தோலுடன் இரண்டாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து தோலை நீக்கித் துருவி இதனுடன் சேர்க்கவும். வெங்காயம் சேர்த்துப் பிசைந்து உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும் (எண்ணெய் குறைவாக காய்ந்தால் கோலா உடைந்துவிடும். அதிகம் காய்ந்தால் உள்ளே வேகாது. கவனமாகப் பொரிக்கவும்).