
திருப்புகழ்க் கதைகள் பகுதி – 350
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
வரி சேர்ந்திடு – திருவேங்கடம் – பார்பரிகன்
மகாபஹரதப் போர் கிமு 9 ஆம் நூற்றாண்டில் குருக்ஷேத்திர ராஜ்ஜியத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் நடந்த போராகும். மகாபாரதப் போர் தொடங்குவதற்கு முன்பு, கிருஷ்ணர் சில சிறந்த வீரர்களிடம் ஒரு கேள்வி கேட்டார், அக்கேள்வி போர் முடிவடைய எவ்வளவு காலம் என்பதாகும். அதற்கு பீஷ்மர், போரை முடிக்க 20 நாட்கள் ஆகும் என்று பதிலளித்தார். இதேபோல், துரோணாச்சார்யா 25 நாட்களும், கர்ணன் 24 நாட்களும், அர்ஜுனன் 28 நாட்களும் ஆகும் என்று பதிலளித்தார்கள். ஆனால் போர்வீரர்களில் ஒருவரான பார்பரிகா, போரை முடிக்க தனக்கு ஒரு நிமிடம் மட்டுமே போதுமானது என்று கூறி அனைவரையும் ஆச்சரியபடுத்தினார்.
பார்பரிகா அல்லது கதுஷ்யம்ஜி பாலியாதேவ் அல்லது ஷியாம் என்பவர் பீமனின் பேரன், கட்டோத்கசனின் மகன். கடோத்கசன் பீமன் ஹிடிம்பி ஆகியோரின் மகன். அவரது குழந்தை பருவத்திலேயே, பார்பரிகா மிகவும் தைரியமான போர்வீரனாக திகழ்ந்தார். அவர் தனது தாயிடமிருந்து போர் கலையை கற்றுக்கொண்டார். பார்பரிகா ஒரு சிவபெருமானின் தீவிர பக்தன்.
அவரின் பதிலில் வியப்படைந்த கிருஷ்ணர், அது எப்படி சாத்தியமாகும் என அவரிடமேயே மீண்டும் கேள்வி கேட்டார். அப்போது சிவபெருமானால் தனக்கு வரமாக அளிக்கப்பட்ட மூன்று அம்புகளின் ரகசியத்தை பற்றி அவர் கூறினார். இந்த அம்புகளை கொண்டு ஒரு நிமிடத்தில் மகாபாரத போரை முடிவிடுவதாக பார்பரிகா கூறினார். கடுமையான தவத்தை மேற்கொண்டு சிவபெருமானிடம் இருந்து சக்திவாய்ந்த வரத்தையும் பெற்றார். அவ்வரம் என்னவெனில் மந்திர சக்தி அடங்கிய மூன்று அம்புககள் ஆகும். தான் அழிக்க நினைக்கும் அனைத்து எதிரிகளையும் முதலில் குறி வைக்கும் முதல் அம்பு. மூன்றாம் அம்பை பயன்படுத்தும் போது, குறியிட்ட அனைவரையும் அது அழித்து விட்டு, மீண்டும் அவரின் அம்புக்கூட்டிற்குள் வந்து விடும். தான் காப்பாற்ற நினைத்த அனைத்து பொருட்களையும் மக்களையும் காப்பதற்கு இரண்டாம் அம்பு பயன்படும். அதன் பின் அவர் மூன்றாம் அம்பை பயன்படுத்தினால், குறியிடாத அனைத்தையும் அழிக்கும். இதனால் பார்பரிக்காவை ‘தீன் பாந்தரி’ அல்லது மூன்று அம்புகளை கொண்டவன் என்றும் அழைத்தனர். ஆனால் அந்த அம்புகளை, போரில், பலவீனமான படைக்கு ஆதராவாக மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்பது ஒரு நிபந்தனை.
பார்பரிகாவின் இந்த சக்தியை அறிந்த கிருஷ்ணர் தனது தந்திரத்தை காட்ட முடிவு செய்தார். ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு துறவியாக மாறுவேடமிட்டு காட்டில் உள்ள அனைத்து இலைகளையும் குறிப்பதன் மூலம் பார்பரிகாவிடம் தனது சக்தியைக் காட்டும்படி கேட்டுக்கொள்கிறார். கிருஷ்ணருடன் காட்டிற்கு சென்ற பார்பரிகா ஒரு மரத்தில் உள்ள இலைகளை எடுக்க முடிவெடுத்தார். பார்பரிகா கண்களை மூடிக்கொண்டிருந்த போது, மரத்தில் இருந்து ஒரு இலையை எடுத்த கிருஷ்ணர் தன் பாதத்திற்கு அடியில் அதை மறைத்து வைத்துக் கொண்டார்.
இலைகளை குறி வைக்க முதல் அம்பை பார்பரிகா எய்திய போது, அந்த மரத்தின் கடைசி இலையை குறிக்க வைக்க, அது இருந்த இடமான கிருஷ்ணரின் பாதத்தை நோக்கி சென்றது. இதை பார்த்து வியந்த கிருஷ்ணர் தன் பாதத்தை தூக்கினார். உடனே அந்த இலையின் மீதும் குறி வைக்கப்பட்டது. அதன் பின் மூன்றாம் அம்பை எய்தியவுடன் அனைத்து இலைகளும் ஒன்று சேர்ந்து ஒரு இடத்தில் போடப்பட்டது.
பார்பரிகா ஒரு நிமிடத்திற்குள் போரை முடிக்க முடியும் என்று கூறியதை இப்போது கிருஷ்ணர் ஒத்துக்கொண்டார். குருஷேத்ர போரில் யாருக்கு ஆதரவாக சண்டை போடப்போவதாக கிருஷ்ணர் பார்பரிகாவிடம் கேட்டார். அதற்கு கண்டிப்பாக பாண்டவர்கள் அணியில் இருந்து தான் போரிட போவதாக தெரிவித்தார். அதற்கு காரணம், அவர்களே கௌரவர்களை விட பலவீனமானவர்கள்.
ஆனால்,பாண்டவர்களுடன் பார்பரிக்கா சேர்ந்து கொண்டால், தானாகவே அவர்கள் அணி வலுவடையும் என கிருஷ்ணர் கூறினார். அதனால் பார்பரிகா குழப்பமடைந்தார். இந்த வரத்தின் நிபந்தனையை நிறைவேற்ற அவர் அணியை மாற்றிக்கொண்டே இருக்க நேரிடும். அதனால் மனித இன பொது நலுனுக்காக தன் உயிரை தியாகம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார் . அதற்கு காரணம் தான் இருக்கும் அணி மிகவும் சக்தி வாய்ந்த அணியாக மாறிவிடும். அதனால் அவரால் தன் சக்தியை பயன்படுத்தவே முடியாது.
அதனால் போர் நடக்கையில், இரண்டு அணிக்கும் மாறி மாறி போய் கொண்டிருக்க வேண்டி வரும். இதனால் இரண்டு அணியின் படைகளும் அழிந்து விடும். கடைசியில் அவர் ஒருவர் மட்டுமே மிஞ்சியிருப்பார். தான் ஒருவர் மட்டுமே போரில் உயிருடன் இருப்பதால், எந்த ஒரு அணிக்கும் வெற்றி கிடைக்க போவதில்லை. அதனால் போரில் அவர் பங்கு பெற வேண்டாம் என கிருஷணர் கேட்டுக் கொண்டார்.
கிருஷ்ணரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட பார்பரிகா தன் தலையை துண்டித்துக் கொண்டார். இறப்பதற்கு முன்பு, கிருஷ்ணரிடம் இருந்து ஒரு வரத்தை பெற்றார். அதாவது மகாபராத போரை தன் கண்களால் பார்க்க வேண்டும். அந்த வரத்தை கிருஷ்ணரும் அவருக்கு அளித்தார். அவரின் தலையை மலையின் உச்சிக்கு எடுத்துக் சென்று பீமன் வைத்தார். அதனால் மகாபராத போர் முழுவதையும் பார்பரிகாவால் காண முடிந்தது.
யுத்தம் முடிவடைந்த பின்னர், வெற்றி பெற்ற பாண்டவர்கள் மகாபாரதப் போரின் வெற்றிக்கு முக்கிய காரணம் யார் என்று வாதிட்டனர். அதற்கு அமைதியான சாட்சியாக இருந்த பார்பரிகாவிடம் கேட்கும்படி கிருஷ்ணர் அவர்களுக்கு அறிவுறுத்துகிறார். அதற்கு பார்பரிகா கிருஷ்ணரின் சாதுரியம் மற்றும் ஆலோசனையும் தான் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று பதிலளித்தார்,