மாவீரன் ஜெய்ஹிந்த செண்பகராமன் 85வது (மே-26) நினைவுதினத்தில்…!

இச்சம்பவம் நாஜிக்களுக்கு மத்தியில் பெரும் கோபத்தை கொடுக்க, செண்பகராமனை கொல்ல சாப்பாட்டில் விஷத்தை வைத்து சதி செய்து கொன்றனர். செண்பகராமன் மே 26, 1934-இல் இறந்திருக்கிறார். ஹிட்லரிடம் எதிர்த்து பேசுவதென்றால் சாதாரண காரியமா?

குமரியில் பிறந்த செண்பகராமன்சில காலத்திற்கு பின் திருவனந்தபுரத்தில் பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். மாணவராக இருந்த காலங்களிலேயே சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார் செண்பகராமன். ஜெர்மன் நாட்டு உளவாளியான சேர் வால்டர் வில்லியம் ஸ்ரிக்லாண்ட் செண்பகராமன் நடவடிக்கைகளில் இருந்த உறுதியான கொள்கைப்பிடிப்பையும், துணிச்சலையும், ஆர்வத்தையும் கண்டு பலவகைகளில் உதவி செய்தார்.

பாரதத்தில் இருந்து வெளியேறிய செண்பகராமன் இத்தாலி, சுவீட்சர்லாந்து, ஜெர்மன் நாடுகளில் வாழ்ந்திருக்கிறார். இத்தாலியில் இருந்த போது இத்தாலிய இலக்கியம், விஞ்ஞானம் படித்திருக்கிறார். பின் சுவிட்சர்லாந்திலும் படிப்பை தொடர்ந்திருக்கிறார். அதன்பின் ஜெர்மனியின் தலைநகரான பெர்லியனில் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.

பட்டப்படிப்பு முடித்த பின் செண்பகராமன் ஜெர்மனியில் தங்கியிருந்தபடியே பாரத ஆதரவு சர்வதேசக் கமிட்டி மூலம் தாய் நாட்டு விடுதலைக்கு ஆதரவு திரட்டத் தொடங்கினார்.அந்த காலக்கட்டத்தில் தான் ஜெர்மனி வேந்தர் கெய்சரின் நட்பு கிடைத்திருக்கிறது செண்பகராமனுக்கு. 1930-இல் பாரத வர்த்தக சபை சமாஜத்தின் பெர்லின் பிரதிநிதியாக செண்பகராமன் நியமிக்கப்பட்டார். அதிலிருந்து 1933-வரையில் அரசியலில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டது செண்பகராமனுக்கு.1933-இல் ஹிட்லர் ஆட்சி ஏற்பட்ட போது அவருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது செண்பகராமனுக்கு.

1933-இல் வியன்னா நடைப்பெற்ற ஓர் மாநாட்டில் சுபாஷ் சந்திரபோஸை முதன்முறையாக சந்திக்கிறார். செண்பகராமன் பாரத தேசியத் தொண்டர் படை திட்டம் பற்றி கேள்விப்பட்டிருந்த சுபாஷ் சந்திரபோஸ் தன்னுடைய பாரத தேசீயப் படை குறித்து கலந்தாலோசித்து இருக்கிறார். அச்சந்திப்பின் முடிவில் தான் செண்பகராமன் எப்போதும் தான் சொல்லும் ஜெய் ஹிந்த் என்ற மந்திர வார்த்தையை உச்சரித்து இருக்கிறார். அச்சொல் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு வெகுவாக ஈர்க்கவே தன்னுடைய தேசீயப்படையின் தாரக மந்திரமாக்கினார். அதுவே நாளடைவில் இமயம் வரையில் ஒலிக்க ஆரம்பித்தது.

செண்பகராமனைப் பற்றி இன்னொரு சம்பவம் பெரும் ஆச்சரித்தையே தரும்.

ஒருமுறை ஹிட்லர் தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது “சுதந்திரம் பெறக் கூடிய தகுதி இந்தியர்களுக்கு கிடையாது” என்று சொன்னார். அருகில் இருந்த செண்பகராமனுக்கு கோபத்தை ஏற்படுத்த பாரதத்தின் பாரம்பரியம் மற்றும் பாரதத்தலைவர்களின் திறமைகளைப் பற்றி பேசி பாரதீயர்களை தரங்குறைந்தவர்களாக நினைக்காதீர்கள் என்று ஆவேசமாக மற்றவர் முன்னணியில் ஹிட்லரிடம் விவாதித்திருக்கிறார்.

ஹிட்லர் தன்னை மன்னித்துக் கொள்ளும்படி கேட்க செண்பகராமனோ, வார்த்தைகளால் மன்னிப்பு கேட்பதை விட எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேளுங்கள் என்று சொல்ல அதன்படியே செய்திருக்கிறார் ஹிட்லர்.

இச்சம்பவம் நாஜிக்களுக்கு மத்தியில் பெரும் கோபத்தை கொடுக்க, செண்பகராமனை கொல்ல சாப்பாட்டில் விஷத்தை வைத்து சதி செய்து கொன்றனர். செண்பகராமன் மே 26, 1934-இல் இறந்திருக்கிறார். ஹிட்லரிடம் எதிர்த்து பேசுவதென்றால் சாதாரண காரியமா?

“தொட்டிலில் அழும் பிள்ளைகள் கூட ஹிட்லரின் பேரைக் கேட்டால் வாயை மூடிக்கொள்ளும்” என ஜெர்மனியில் சொல் வழக்கு உண்டு. அறிவில் சிறந்தும் துணிவில் ஈடு இணையற்ற ஓர் சத்ரியனாக ஜெர்மனியில் இருந்து பாரத சுதந்திரத்திற்கு போராடிய மாவீரன் செண்பகராமனைப் பற்றி ரகமி ஜெய் ஹிந்த் புத்தகத்தில் பல அருமையாக நிகழ்ச்சிகளையும் வெளி உலகத்திற்கு தெரிவித்திருக்கிறார்.

செண்பகராமனைப் போல் வரலாறுகளில் மறைக்கப்பட்ட பல மாவீரர்களை நினைக்கும் போது, அழுவாச்சி ஆட்டம் நடத்தியவர்களெல்லாம் அகிம்சைவாதிகளாகவும், சோணங்கிகளெல்லாம் சுதந்திர வீரர்களாகவும், அகிம்சையில் வென்ற பாரதச் சுதந்திரம் என்று பீற்றிக் கொள்வதில் இருக்கும் நிகழ்கால இந்தியாவின் மீது பெருங்போபமே எழுகிறது.

இந்திய சுதந்திரத்திற்காக வெளி நாடுகளில் இருந்து ஆயுதம் தாங்கி போராடிய போராளிகளை தீவிரவாதிகள் என்றவர்களல்லவா அகிம்சைவாதிகள்?!
உளறி அதை பாடதிட்டங்களிலும் கொண்டுவந்து தங்கள் அாிப்பை தீா்த்து கொண்டிருகிறாா்கள்.

நம் பாரத தேச வரலாறு நோ்மையான வரலாற்று ஆசிாியா்களால் மண்ணின் மானம் காக்கும் வன்னம் உண்மையான வரலாற்றை தொகுத்து பாடதிட்டங்களில் வெளியிடபட வேண்டும்.

ஜெய்ஹிந்த்..!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...