ராஜினாமா செய்துடாதீங்க…! ப்ளீஸ்! இல்லீன்னா.. தமிழகத்துல தற்கொலை செய்துப்பாங்க!

Published:

Rahul and chidu - 2026

ராகுல் ப்ளீஸ் .. ராஜினாமா செய்துடாதீங்க.. ப்ளீஸ்… – நீங்க மட்டும் ராஜினாமா செய்துட்டீங்கன்னா. தமிழ்நாட்ல காங்கிரஸ் நிர்வாகிங்க பல பேரு தற்கொலை செய்துப்பாங்க…அதனால…

  • இப்படித்தான் தமிழகத்தின் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சிதம்பரம் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் கெஞ்சினாராம். இந்தச் செய்தியைப் படித்து விட்டு தமிழகத்தில் பலர் சிரிக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் கிண்டலும் கேலியும் தூள் பறக்கின்றன. பலர் வாட்ஸ் அப்பில் பகிர்ந்து தங்கள் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துகின்றனர்.

ஆனால் இந்தக் காரியக்  கமிட்டிக் கூட்டத்தில் ராகுல் சொன்ன ஒரு கருத்துதான் இப்போது ஹாட் டாபிக்.

இந்த முறை தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் அலசிக் கொண்டிருந்த போது, ராகுல் சொன்னாராம்… காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு சீட் கேட்பதில்தான் கவனம் செலுத்தினர். அதற்காக என்னை அதிகம் நெருக்குதலுக்கு உள்ளாக்கினர்… என்றார்.

இந்தக் கருத்து ப.சிதம்பரத்துக்கும் சேர்த்துச் சொன்னதுதான்! காரணம், தனது மகன் கார்த்திக்கு இந்த முறை சீட் தரவில்லை என்றால், தாம் கட்சியை விட்டு வெளியேறிவிடப் போவதாக ராகுலிடம் மிரட்டினார் ப.சிதம்பரம் என்ற உண்மையைப் போட்டுடைத்தார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

மத்திய அமலாக்கத்துறை, வருமானவரித் துறைகளின் பிடியில் சிக்கிக் கொண்டு, பொருளாதாரக் குற்றங்களில் கைதாகி, நீதிமன்றத்தின் படியேறி வாய்தா மேல் வாய்தா பெற்று, முன்ஜாமீன்களுடன் உலவும் கார்த்திக்கு சீட் கொடுக்க காங்கிரஸ் மேலிடம் தயங்கிய போது, மிரட்டிப் பெற்றார் சிதம்பரம் என்று காங்கிரஸ் தலைவர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் சிதம்பரத்தின் இந்த தற்கொலை விவகாரப் பேச்சு இப்போது  நகைச்சுவை ஹாட்டாக உலா வருகிறது!

Related articles

Recent articles

spot_img