school - 2026

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

சற்றுமுன் கல்வி தமிழகம்
school exams - 2026

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், முடிவுகள் வெளியாகும் தேதி வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகள் மே மாதத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகவுள்ளன

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதி வெளியாகும்.

கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள்… இந்தாண்டு எழுதிய தேர்வின் முடிவுகள் மே 20-ம் தேதி வெளியாகும்.

தேர்வு முடிவுகளை, tnresults.nic.in dge.tn.gov.in-ஆகிய இணையதளங்கள் வாயிலாக காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.