விபூதி எல்லாத்தையும் தூக்கி போட்டு, பிள்ளையார் சிலைக்கு கீழே யானை வெடி வச்சேன் அது சிதறி வெடித்தது” என தான் இந்துமத அடையாளங்களை அழித்தது பற்றி பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும், தற்பொழுதைய தி.மு.க எம்.பி’யுமான ஆ.ராசா.
தி.மு.க’வின் இந்து மத வெறுப்பு மக்கள் அறிந்ததே! இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் கூற மாட்டார்கள், இந்துக்களுக்கு மனது நோகும்படியான வார்த்தைகளை மேடைக்கு மேடை பிரச்சாரம் செய்வார்கள், யாராவது இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசினால் அவர்களை மேடை போட்டு பொன்னாடை போர்த்தி அழகு பார்ப்பார்கள், இந்துமத சின்னங்களான திருநீறு, குங்குமம் போன்றவற்றை கூட சம்பிரதாயமாக அணிவதை அருவருப்பாக நினைப்பார்கள்.
இந்த நிலையில் தி.மு.க கட்சியின் எம்.பி. ஆ.ராசா வழக்கம்போல் மீண்டும் இந்து மதத்தின் சின்னங்களை, வணங்கும் கடவுளை தான் சிறு வயதில் அவமதித்தது குறித்து பெருமையாக பெரியார் இயக்க விழாவில் கூறி கைத்தட்டல் வாங்கி இந்துக்களை புண்படுத்தியுள்ளார்.
பெரியார் இயக்கத்தை சேர்ந்த ஆனைமுத்து என்பவர் சமீபத்தில் இறந்தார். அவரின் படத்திறப்பு விழாவில் பேசி தி.மு.க’வின் ஆ.ராசா கூறியதாவது, “பூலோக ரீதியாக நானும் மறைந்த ஆனைமுத்துவும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள், 1973’ல் நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது பெரியார் குடில் நடத்தினார் ஆனைமுத்து நான் அதில் படித்தேன்.
அப்பொழுது நான் வெளியில் கிளம்பும் போது என் அம்மா இது முருகன் விபூதி இதை வைத்துக்கொள் என தருவார்கள் நானும் வைத்துக்கொண்டேன். பின்னர் பெரியாரின் கடைசி உரையை கேட்டேன் தொடர்ந்து அவரின் புத்தகங்களை படித்தேன்.
அதன் பிறகு அந்த விபூதி எல்லாம் தூக்கி போட்டேன், தூக்கி போட்டது மட்டுமல்லாமல் எங்கள் ஊரில் இருக்கும் விநாயகர் சிலையின் கீழ் ஆனைவெடி வைத்தேன் அது வெடித்து சிதறியது. பெரிய பிரச்சினை ஆனது.. அதெல்லாம் ஒரு காலம். என் இந்த மாற்றத்திற்கு காரணம் பெரியாரின் கடைசி பேச்சு” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் நானே நினைத்தாலும் இந்துவாக இருந்து என்னால் வெளியேற முடியாது. ஏன் என்றால் இந்து அமைப்பு சட்டத்தில் யார் கிறிஸ்துவர்கள், யார் இஸ்லாமியன், யார் யூதன் இல்லையோ மற்ற அனைவரும் இந்து என்றுதான் சட்டம் உள்ளது.
எனவே நானே நினைத்தாலும் வெளியேற முடியவில்லை அப்படி வெளியேறினால் அந்த நாள் வந்தால் அதுதான் ஆனைமுத்துவிற்கு மரியாதை செய்யும் நாளாக இருக்கும் என தெரிவித்த அவர் காவியை அழிக்க அனைத்து கருப்பு சிவப்பு நீலமும் ஒன்று சேர வேண்டும் என கூறினார்.
பெரியார் கழக விழாவில் இந்து மதத்தை நான் அவமதித்தேன் என திமிறாக கூறும் நபரைத்தான் தி.மு.க கொள்கை பரப்பு செயலாளராக வைத்துள்ளது.