கோவிட்-19 தொற்றுநோயின் மற்றொரு புதிய மாறுபாடான IHU மாறுபாட்டை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மாறுபாடு முதன்முதலில் டிசம்பர் 10 அன்று கண்டறியப்பட்டது.
எனினும், உலக சுகாதார அமைப்பான WHO அதை இன்னும் விசாரணையில் உள்ள மாறுபாடாக பெயரிடவில்லை. புதிய IHU மாறுபாட்டால், மார்செய்ல்ஸ் அருகே குறைந்தபட்சம் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் பதிவாகியுள்ளன.
உலக மக்கள், கோவிட்-19 (Covid 19) நோய்த்தொற்றின் திடீர் அதிகரிப்பாலும், ஓமிக்ரான் எனப்படும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டாலும் ஏற்கனவே பீதியில் உள்ளனர்.
இப்போது, பிரான்சில் உள்ள விஞ்ஞானிகள் ஓமிக்ரானை விட அதிக பிறழ்வுகள் கொண்ட புதிய மாறுபாட்டை கண்டறிந்துள்ளனர்.
IHU என பெயரிடப்பட்ட, B.1.640.2 மாறுபாடு IHU மெடிட்டரேனி இன்ஃபெக்ஷன் நிறுவனத்தில் உள்ள கல்வியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 46 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது ஓமிக்ரானை விடவும் அதிகமாக பரவக்கூடியது, அதிக எதிர்ப்புத் திறன் கொண்டது.
புதிய மாறுபாட்டால் குறைந்தது 12 பேர் மார்செய்ல்ஸ் அருகே பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்கு செய்யப்பட்ட பயணத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
உலகின் பெரும்பாலான பகுதிகளில் ஓமிக்ரான் (Omicron) மாறுபாடு இன்னும் ஆதிக்கம் செலுத்தும் விகாரமாக உள்ளது. இருப்பினும், IHU மாறுபாட்டின் அச்சுறுத்தல் வேகமாக அதிகரித்து வருகிறது.
B.1.640.2 மற்ற நாடுகளில் கண்டறியப்படவில்லை, அல்லது உலக சுகாதார அமைப்பின் (WHO) விசாரணையின் கீழ் ஒரு மாறுபாடு என்று இதுவரை பெயரிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
தொற்றுநோயியல் நிபுணர் எரிக் ஃபீகல்-டிங் ஒரு நீண்ட ட்விட்டர் பதிவை வெளியிட்டார். அதில் அவர் “புதிய மாறுபாடுகள் தொடர்ந்து வெளிவருகின்றன, ஆனால் அவை மிகவும் ஆபத்தானவை என்று அர்த்தமல்ல.
ஒரு மாறுபாட்டை மிகவும் நன்கு அறியப்பட்டதாகவும் ஆபத்தானதாகவும் ஆக்குவது அசல் வைரஸுடன் தொடர்புடைய பிறழ்வுகளின் எண்ணிக்கையின் காரணமாக அதன் பெருகும் திறன்தான்” என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் இருந்து பெறப்பட்ட ஒரு நோயாளியின் மாதிரியில் ஓமிக்ரான் மாறுபாடு கண்டறியப்பட்டது. அப்போதிருந்து, இது 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் ஓமிக்ரானால் (Omicron India) 1,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வேளையில், பிரான்சிலிருந்து கிடைத்துள்ள புதிய மாறுபாடு பற்றிய செய்தி, மக்களிடையே அதிக பீதியைக் கிளப்பியுள்ளது.