
பிரபல ஹரிகதா விற்பன்னரும், பஜனை சம்பிரதாயத்தில் கொடிகட்டிப் பறப்பவரும் உபன்யாசகருமான விட்டல்தாஸ்ம் தம்முடைய உபன்யாசத்தின் இடையே பிரதமர் மோதியை மகாத்மா மோதி என்று குறிப்பிட்டு அவருக்கு புகழாரம் சூட்டினார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தமது தொகுதியான வாராணசியில் காசி விஸ்வநாதர் ஆலயத்தை மறுசீரமைப்பு செய்து புதிய முறையில் நிர்மாணம் செய்துள்ளார். காசி பெருவழிப்பாதை என்று கங்கை கரையில் புனித நீராடிவிட்டு அங்கிருந்து கங்கை நீர் எடுத்துச் சென்று காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்வதற்கு உரிய ஏற்பாடுகளை செய்துள்ளார்.
அவ்வாறே அவர் கங்கையில் புனித நீராடி காசி விஸ்வநாதருக்கு மந்திரங்கள் ஸ்லோகங்களைச் சொல்லி அபிஷேகம் செய்தார் இந்த நிகழ்வு ஆன்மிகவாதிகள் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல நூற்றாண்டு கனவு தற்போது நிறைவேறி இருப்பதாக பலரும் மெய் சிலிர்ப்புடன் இதனை தெரிவித்து வருகிறார்கள்
அவ்வகையில் பஜனை சம்பிரதாயத்தில் பிரபலமான விட்டல் தாஸ் தமது பஜனை உபன்யாசத்தின் இடையே பிரதமர் மோதியை மகாத்மா மோதி என்று குறிப்பிட்டு புகழாரம் சூட்டியுள்ளார் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் குஜராத்தின் மகாத்மா காந்திக்கு பிறகு மகாத்மா மோதி தான் என்று குறிப்பிடுகிறார் மேலும் இந்த நாட்டின் பெரியோர்கள் பலரது புண்ணிய பலனை பிரதமர் மோடி ஆக நாம் பார்க்கிறோம் என்று குறிப்பிடுகிறார். நாட்டில் இதுவரை இல்லாத வகையில் இதுவரை எந்த பிரதமரும் செய்யாத செயலை அவர் செய்திருப்பது நாம் செய்த புண்ணியம் என்றும் குறிப்பிடுகிறார். அவரது வீடியோவை பலரும் சமூக தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வீடியோ….