8 வது தென்மாவட்ட அளவிலான யோகாசன சாம்பியன் ஷிப் போட்டி திருநெல்வேலியில் நடந்தது. தமிழ்நாடு யோகாசன சங்கம் பொதுச்செயலாளர். ராமலிங்கம் தலைமை தாங்கினார். திருநெல்வேலி மாவட்ட தலைவர் நாதன், லிட்டில் பிளவர் பள்ளிக்குழுமங்களின் தலைவர் மரியசூசை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அழகேச ராஜா வரவேற்றார். திருநெல்வேலி மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பாலா போட்டியை துவக்கி வைத்தார். அருட்தந்தை அந்தோணி குருஸ் வாழ்த்துரை வழங்கினார். மதுரை, விருதுநகர். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 500க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நெல்லையில் தென்மாவட்ட அளவிலான யோகாசன போட்டி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Popular Categories