29/09/2020 7:40 AM

வியாழக் கிழமைகளில் விவசாயிகள் பலன்பெற தேங்காய் மறைமுக ஏலம்!

இனி வரும் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தேங்காய் மறைமுக ஏலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சற்றுமுன்...

நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர்! பிறகு என்ன நடந்தது?! வீடியோ வைரல்!

ஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.

தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.

செப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு!

இதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சீமான் அனுமதி

  உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர்...

மதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு!

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
agri-dept-madurai
agri-dept-madurai

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…

மதுரை வேளாண்மை விற்பனை குழுவின் கீழ் இயங்கும் மேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 10.9.2020 அன்று முதன்முறையாக ஏலம் மூலம் தேங்காய் விற்பனை நடைபெற்றது.

முதன்முறையாக மேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் விற்பனைக்கென நடைபெற்ற மறைமுக ஏலத்தினை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பெ. விஜயலட்சுமி முன்னிலையில் மதுரை விற்பனை குழு செயலாளர் வி.மெர்ஸி ஜெயராணி துவக்கி வைத்தார். ஜி. வெங்கடேஷ் கண்காணிப்பாளர் மறைமுக ஏல முறை குறித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு விளக்கிக் கூறினார்.

மேலூர் மற்றும் கொட்டாம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தி குழுக்கள் 4800 தேங்காய்களை இரு குவியல்களாக கொண்டு வந்தனர்.

மறைமுக ஏலத்தில் ஆறு தேங்காய் வியாபாரிகள் பங்குபெற்றனர். ஒரு தேங்காய் ரூபாய் 12‌.50 என்ற விலையில் 3600 காய்களை கொண்ட ஒரு குவியலும், ஒரு காய்க்கு அதிகபட்ச விலையான ரூபாய் 13/- என்ற விலையில் 1200 காய்கள் கொண்ட மற்றுமொரு குவியலும் ஏலம் முடிக்கப்பட்டு ரூபாய் 60600/- வியாபாரிகளிடம் இருந்து பெற்று உடனடியாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

இதனால் விவசாயிகள், உழவர் உற்பத்தி குழுக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து இனி வரும் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தேங்காய் மறைமுக ஏலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே இதனை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தேங்காய் ஏலம் தொடர்பாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கருப்பையா (மேற்பார்வையாளர் மேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்) 9940965965 என்ற எண்ணிலும், ஜி. வெங்கடேஷ் (கண்காணிப்பாளர், மதுரை விற்பனை குழு) 90251 52075 என்ற எண்ணிலும் வெங்கடேசன், (உதவி வேளாண்மை அலுவலர்) 90473301972 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது…. என்று மதுரை விற்பனை குழு செயலர் தெரிவித்துள்ளார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

கலவரங்கள் உருவாக்கப் படுவதை தடுக்க… சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா உருவாக்க வேண்டும்!

தமிழகத்தில் தேவையற்ற கலவரங்களை தடுக்க "சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா" உருவாக்கிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி

சமையல் புதிது.. :

சினிமா...

தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.

எஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்!

 நடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு  எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News

சோகமான ஆச்சரியம்! மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,!

ஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..? Source: Vellithirai News

எஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்நிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா.  Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »