
தொடர் மழை காரணமாக மதுரை அருகே அருவியில் கொட்டும் நீர்வீழ்ச்சி குளிக்க தடை விதித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அருவி உள்ளது. “மதுரையின் குற்றாலம்” “சின்ன குற்றாலம்”என அழைக்கப்படும் தாடகை நாச்சியம்மன் நீர் அருவி உள்ளது. சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அறிவியல் தண்ணீர் ஆர்ப்பரித்து ஆனால் தமிழக அரசும் வனத்துறையும் பாதுகாப்பு எஎன்ற காரணம் சொல்லி சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதி மறுத்து வருகிறது. ஆனால்கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பள்ளி விடுமுறை நாட்களிலும் மற்றும் ஓய்வு நாட்களிலும் அருவியில் குளித்து மகிழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் உடை மாற்றும் இடம், அருவிக்குச் செல்லும் பாதை ஆகியன போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளதாக கூறி வனத்துறை சார்பில் அனுமதி மறுத்து வந்தனர்
. இதனால் அருவியில் இருந்து கீழே விழும் தண்ணீரில் குளிக்க முடியாதவர்கள் ஓடையில் குளித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து மதுரை குலமங்கலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கூறும் போது
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரே சுற்றுலா தளம் இதுதான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நாங்கள் பல முறை இங்கு சுற்றுலா வந்து குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து வந்தோம். தற்போது போதிய பராமரிப்பு இல்லை என கூறி வனத்துறை அனுமதி மறுத்து வருகின்றனர்.
இதனை தமிழக அரசு உடனடியாக பெண்கள் உடை மாற்றும் அறை மற்றும் அருவிக்கு செல்லும் பாதை ஆகியவற்றை பராமரித்து குளிக்க அனுமதி வழங்க வேண்டும்.
மேலும். சுற்றுலா துறை சார்பில் மேம்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். அதிக அளவில் போலீசார் நியமித்து தகுந்த பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.