கோவை சம்பவம்; தமிழக அரசின் மெத்தனத்தால்… ஆளுநர் கவலை!

Published:

1766582 rn ravi - 2026

கோவையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்ற கார் குண்டு தற்கொலைப்படை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் என் ஐ ஏ விசாரணைக்கு தமிழக அரசு மெத்தனமாக ஒப்படைத்தது குறித்து தனது கவலையை ஆளுநர் ரவி மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.

தில்லி சென்று வந்த பின்னர் தமிழகஆளுநர் இந்தச் சம்பவத்தில் தமிழகஅரசின் மெத்தனம் குறித்து மீண்டும் தன் கவலையை வெளியிட்டார். இன்று அவரது அதிகாரபூர்வ டிவிட்டர் பதிவில் தமிழகத்தின் பாதுகாப்பு கருதி அவர் வெளியிட்ட பதிவு…

கோயம்புத்தூர்குண்டுவெடிப்பு வழக்கை #என்ஐஏ விடம் ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் உயர்மட்ட பயங்கரவாத சதித்திட்டத்தில் முக்கிய ஆதாரங்களை அழிப்பது குறித்து ஆளுநர் கவலை தெரிவித்தார். அவர் தமிழக காவல்துறையை பாராட்டினார் மற்றும் பயங்கரவாதிகள் யாருக்கும் நண்பர்கள் இல்லை.

PFI மீதான தடையைத் தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேலாக மாநிலத்தில் நடத்தப்பட்ட இலக்கு தாக்குதல்களை ஆளுநர் நினைவு கூர்ந்தார். பயங்கரவாதத்தை முறியடிக்க நிர்வாக நிறுவனங்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தினார்.
@PMOIndia @HMOIndia

முன்னதாக இந்த விவகாரத்தில் அவர் தெரிவித்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் ரவியை மாற்ற வேண்டும் என்று கோரி தமிழக ஆளும் கட்சிகள் தரப்பில் கையெழுத்து வேட்டை நடத்தப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் தனது கவலையை ஆளுநர் ரவி வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img